Chief Minister Jayalalithaa’s In Perambalur have to get better at the candle light special prayer for Christians
பெரம்பலூர் மாவட்டம், அன்னமங்கலம் கிராமத்தில் உள்ள புனித தோமையார் ஆலயத்தில் இன்று கிறித்துவர்கள், முதலமைச்சர் ஜெயலலிதா பூரண நலம் வேண்டி மெழுகுவர்த்தி ஏந்தி சிறப்பு பிரார்த்தனை நடத்தினர்.
இன்று காலை, அன்னமங்கலம் புனித தோமையார் ஆலயத்தில் நடந்த ஆராதனை விழாவில் அன்னமங்கலம் ஆர்தர்ஹெல்லர் தலைமையில் ஏராளமான கிறித்துவர்கள் முதலமைச்சர் ஜெயலலிதா, பூரண குணமடைய வேண்டும், நலம் பெற்று தமிழகத்தை மீண்டும் ஆள வேண்டும் என்று ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர்கள் ஏராளமானோர் மெழுகுவர்த்தி ஏந்தி ஜெபம் செய்து மெழுகுவர்த்தியுடன் சிறப்பு பிரார்த்தனை நடத்தினர்.
அப்போது அந்த ஆலயத்தின் பங்கு தந்தை மரியதாஸ், வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம், முன்னாள் ஒன்றிய செயலாளர் கண்ணுசாமி, வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ஜெயலட்சுமி கனகராஜ், மாவட்ட இணை செயலாளர் ராணி, ஒன்றிய இணை செயலாளர் பெரியம்மாள்நீலன், அன்னமங்கலம் ஊராட்சித் தலைவர் குதரத்துல்லா, வெண்பாவூர் லோகநாதன், பிம்பலூர் பெரியசாமி, மற்றும் திரளான அ.தி.மு.க வினர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர். தொடர்ந்து பொங்கல் சாதமும் வழங்கப்பட்டது.