Chief Minister’s visit to Perambalur – Ariyalur: Review with Collector officials about progress!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பெரம்பலூர் – அரியலூர் மாவட்டங்களில் முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக 15.11.2024 அன்று அரியலூர் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார்.

இந்நிகழ்சிக்கான, முன்னேற்பாட்டு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமையில், போலீஸ் எஸ்.பி ஆதர்ஸ் பசேரா முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

அதில், தமிழ்நாடு முதலமைச்சர் கலந்துகொள்ள உள்ள அரசு விழாவினை சிறப்பாக நடத்த அனைத்து துறை அலுவலர்களும் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யும் பணிகளை உரிய காலத்திற்குள் செய்து, பயனாளிகளின் பட்டியலை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் வழங்கிட வேண்டும்.

பயனாளிகளை அழைத்து வருவதற்கான வாகன வசதிகள் , எந்தெந்த பகுதிகளில் இருந்து பயனாளிகள் அழைத்துவரப்பட உள்ளார்கள், எத்தனை பேருந்துகள் தேவைப்படும் என்பதை கலந்தாலோசித்து, பேருந்துக்கான பொறுப்பு அலுவலர்களை நியமித்து வட்டார போக்குரவத்துத்துறை மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துகழக அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பயனாளிகளை பாதுகாப்பாக விழா நடைபெறும் இடத்திற்கு அழைத்து வந்து, விழா முடிந்ததற்கு பிறகு அவர்களை பாதுகாப்பாக அழைத்துவரும் பணிகளை தொடர்புடைய துறை அலுவலர்கள் மற்றும் அனைத்து வருவாய் வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.

பெரம்பலூர் மாவட்டத்தில், முடிவுற்ற திட்டப்பணிகளின் விவரங்கள் புதிதாக அடிக்கல் நாட்டப்படவுள்ள பணிகளின் விவரங்களை தொடர்புடைய துறை அலுவலர்கள் சரிபார்த்து அதன் விபரத்தை கையொப்பமிடப்பட்ட கடிதத்துடன் வழங்கிட வேண்டும். இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலர் ஆகியோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போதிய அளவில் அவசர ஊர்தியினையும், மருத்துவ குழுக்களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தீயணைப்பு வாகனங்களை தீயணைப்பு துறையினர்கள் தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறது.

தேர்வு செய்யப்படும் மேடைப்பயனாளிகளை அழைத்துவர பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட வேண்டும். விழா நடைபெறும் இடத்தில் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்டவற்றை நகராட்சி நிர்வாகத்தினர் மேற்கொள்ள வேண்டும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கலந்துகொள்ளும் அரசு விழா சிறப்பாக நடைபெற அனைத்துத்துறை அலுவலர்களும் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும், என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் அனைத்துத் துறைகளின் முதல்நிலை அலுவலர்கள், அனைத்து வட்டாட்சியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!