Citizens besiege Perambalur Collector’s Office demanding closure of illegal quarrying with the help of officials!

பெரம்பலூர் அருகே உள்ள பீல்வடி கிராமத்தில் சட்ட விரோதமாக இயங்கி வரும் குவாரியை மூடக்கோரியும், கிராம சபை கூட்டத்தில் கடந்த மே மாதம் நிறைவேற்றிய தீர்மானத்தை நடைமுறைபடுத்தக் கோரியும் கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.

சித்தளி மேற்கு சர்வே எண் 104 / 2008 -ல் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி செயல்பட்டு வருகிறது. விவசாய நிலத்தில் குவாரி அமைந்துள்ளதாகவும், அதிக அளவிலான லாரிகள் போக்குவரத்தாலும், கல், மண் ஆகியவை உரிய அனுமதி இல்லாமல் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தும் வகையில் எடுத்து செல்லப்பட்டு வருவதாகவும், வெடிகள் அதிக சத்தத்தை எழுப்புவதால், வீடுகள் அதிர்வுற்று விரிசல் ஏற்படுவதாகவும், அதனால் நிரந்தரமாக குவாரியை அப்பகுதி மக்களுக்கு நிம்மதி கொடுக்க வேண்டி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். மேலும், குவாரி உரிமையாளருக்கு சில அதிகாரிகளும், அரசியல்வாதிகளும், ஆதரவாக துணை நிற்பதாகவும் தெரிவித்தனர்.

அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தன் பேரில் கலைந்து சென்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!