Citizens besieged the house of the DMK Town Panchayat vice president, along with the president and councilor, who blocked the basic facilities!

பெரம்பலூர் மாவட்டம், பூலாம்பாடி பேரூராட்சியின் துணைத் தலைவராகவும், பூலாம்பாடி திமுக பேரூர் செயலாளராகவும் செல்வலெட்சுமி இருந்து வருகிறார்.

பூலாம்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட பாரதி நகர் அருகே வசித்து வரும், செல்வலட்சுமி, நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு 7 வார்டு கவுன்சிலராக
நின்று வெற்றி பெற்றார்.

மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியாகவும், இருக்கும் 7வது வார்டுக்கு உட்பட்ட அரசரடிக்காடு, மற்றும் மலையடிவார பகுதிகளில் குடியிருக்கும்பொதுமக்களுக்கு சாலை வசதி, குடிநீர் வசதி, உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் பேரூராட்சி துணைதலைவர் செல்வலட்சுமி செய்து தருவதாக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரியும்,
பல முறை நினைவூட்டல் செய்தும், கோரிக்கை விடுத்தும் வந்துள்ளனர்.

ஆனால், செல்வலட்சுமியிடம், கேட்கும் போது முறையான பதில் கொடுக்கமல் இருந்து வந்துள்ளார். அதோடு பொதுமக்கள் பேரூராட்சி அதிகாரிகளை சந்தித்து தங்களது கோரிக்கைகளை தெரிவிக்க முயற்சித்தால் அதற்கு முட்டுக்கட்டை போடுவதாகவும் பொதுமக்களுக்கு தெரிய வந்துள்ளது.

தானும் செய்யாமல், அதிகாரிகளையும் செய்யவிடாமல் தடுத்து வந்ததால், இன்று மதியம் ஆத்திரமடைந்த வார்டு பொதுமக்கள் ஒன்று கூடி செல்வலட்சுமியின் வீட்டை முற்றுகையிட முடிவு செய்தனர். தகவலை அறிந்த செல்வலட்சுமியும், அவரது கணவரும், தலைமறைவானார்கள்.

முடிவெடுத்த பொதுமக்கள், வயலில் குடியிருக்கும் செல்வலட்சுமியின் வீட்டிற்கு சென்று சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக காத்து கிடந்தனர். போன் மூலம், வீட்டில் இருந்த அவரது மகள் மற்றும் அவரது உறவினர்கள் தகவல் தெரிவித்தும் பொதுமக்கள் வீட்டிற்கு வந்திருப்பதை அறிந்து வீட்டிற்கு வந்து பொதுமக்களை சந்திக்க வரவில்லை, மேலும், போன் மூலமும், யாருக்கும் தகவல் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

காத்து கிடந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு, திமுக துணைத் தலைவரும், பேரூராட்சி துணைத் தலைவருமான செல்வலட்சுமி மற்றும் அவரது கணவரது செயலைக் கண்டித்தும், வீட்டை முற்றுகையிட்டு கோசங்கள் எழுப்பினர். இதனால், அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த போராட்டத்திற்று ஆதரவாக அந்த பேரூராட்சியின் தலைவர் பாக்யலட்சுமி, மற்றும் திமுக, அதிமுக, சுயேட்சை கவுன்சிலகளும், 13 பேரும் முற்றுகை போராட்டத்தில் பொதுமக்களுடன் கலந்து கொண்டனர். ஆனால் திமுக துணைத் தலைவர் செல்வலட்சுமி, வாக்களித்த தங்களை வந்து சந்திக்கும் வரை முற்றுகை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதை அறிந்த வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர் நல்லதம்பி சம்பவ இடத்திற்கு வந்து நேரில் பார்த்துக் கொண்டிருந்தார். மேலும், தொகுதி எம்.எல்.ஏ பிரபாகரன் அப்பகுதியை சேர்ந்தவர்களிடம் தொலைபேசி மூலம் கேட்டறிந்தார்.

ஆளும்கட்சியை சேர்ந்த பேரூராட்சித் தலைவருக்கு எதிராக நடந்த முற்றுகை சம்பவம், திமுக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, அதிமுகவினர்க்கு மேடைகளில் பேசுவதற்கு பொருளாகவும் மாறிவிட்டது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!