Clash between two parties near Perambalur: Case registered against 35 persons!
பெரம்பலூர் அருகே உள்ள லாடபுரம் கிராமம். அந்த கிராமத்தை சேர்ந்த இரு தரப்பு சமூகத்தினரிடையே நேற்றிரவு ஏற்பட்ட மோதலில் ஒருவருக்கு மண்டை உடைந்தது. மேலும் 2 பேர் காயமடைந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்றிரவு ஏற்பட்ட இந்த மோதலை குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு உரிய பாதுபாப்பு பணிகளை மேற்கொண்டனர். மேலும், மோதலுக்கு காரணமாக இருந்த இரு தரப்பை சேர்ந்த சுமார் 35 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். மேலும், தப்பி ஓடிய அனைவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், காவல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பொது அமைதிக்கு குந்தகம் விளைக்கும் வகையில் செயல்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்ததோடு, அமைதி பேச்சு வார்த்தை நடத்த தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பாதுகாப்பிற்கு அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். லாடபுரம் கிராமத்தில் அடிக்கும் நடக்கும் மோதல்களால், அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்படுவதோடு, பதட்டமும் ஏற்படுகிறது.
எனவே, லாடபுரத்தில் மோதலை தூண்டி பொதுமக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கையை கெடுப்பவர்கள் மீது, இரும்பு கரம் கொண்டு ஒடுக்கவேண்டும் என அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.