Class 12th results: Perambalur district tops the list! Second place in the state in 10th class !!
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த +2 வகுப்பு தேர்வுகளில் 97.95 சதவீதம் பெற்று தமிழ்நாடு மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளது. இதனால், ஆசிரியர்கள், மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நடந்து முடிந்த, பனிரெண்டாம் வகுப்பு தேர்வில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளி அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 7667 மாணவர்கள் தேர்வு எழுதினர். அதில், 7510 மாணவர்கள் தேர்ச்சி அடைந்தனர். இது தேர்ச்சி விகிதத்தில் 97.53 சதவீதம் மாணவர்களும், 98.39 சதவீதம் மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர். சராசரி தேர்ச்சி 97.95 ஆகும். இது தமிழக அளவில் முதலிடம் பெற்றது.
இதே 10 ம் வகுப்பில் தேர்ச்சி விகித்த்தில் மாநில அளவில் இரண்டாம் இடத்தை இன்று பெரம்பலூர் பெற்றுள்ளது. கல்வித்துறை அதிகாரிகள் ஆசிரியர்கள், மாணவர்களை கலெக்டர் வெங்கடபிரியா பாராட்டுக்களை தெரிவித்தார்.