Collector loses sleep over Nivar storm in Perambalur district: Midnight inspection with government employees

 

நிவர் புயலின் எதிரொலியாக சென்னை, புதுச்சேரி, நாகை, தஞ்சை, கட லூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன் காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தில் நிவர் புயலை எதிர் கொ ள்ள மாவட்ட நிர்வாகம் பல்வேறு பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வெண்பாவூர், பசும்பலூர், வி.களத்தூர், திருவாலந்துறை உள்ளிட்ட வெள்ளாற்று கரையோர பகுதியில் உள்ள கிராமங்களில் நிவர் புயலால் பெய்து வரும் கன மழையால் பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கை களை பெரம்பலூர் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தூக்கத்தை தொலைத்து நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை வருவாய்த்துறை உள்ளிட்ட அரசு அலுவலர்களுடன் கிராமம், கிராம மாக நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கினார்.

இந்த ஆய்வின் போது பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளாக கண்டறியப்ப ட்ட கிராமங்களில் பொதுமக்ள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிகளை நேரில் சந்தித்து பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஏதேனும் குறைபாடுகள் உள்ள தா? என்றும், அனைவரும் தங்களது வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், கன மழையால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக பெரம்பலூர் மாவட்ட உதவி மையத்தை 1800 425 4556, 8903024616 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

தூக்கத்தை தொலைத்து, அதிகாலை வரை அசுர வேகத்தில் தொடர்ந்த ஆட்சியரின் ஆய்வு பணி வருவாய்த்துறையினர் உள்ளிட்ட அரசு அலு வலர்களை சற்று முகம் சுளிக்க வைத்தாலும், பெரம்பலூர் மாவட்ட மக்கள் ஆட்சியரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!