Collector Venkatapriya instructs visitors to Perambalur district for Deepavali to check for signs of corona infection!

பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

பெரம்பலூர் மாவட்டத்திற்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து பண்டிகைக்காக வருகை தரும் பொது மக்களும், தற்போது வசிப்போர்களுக்கும், காய்ச்சல், சளி, இருமல், தொண்டை வலி, தசை வலி, மூச்சி விடுவதில் சிரமம், சுவை இன்மை, நுகர்ச்சி இன்மை, வாந்தி, வயிற்றுப் போக்கு போன்றவற்றில் எதாவது ஒரு அறிகுறி தென்பட்டாலோ உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

தீபாவளி பண்டிகை வரை பெரம்பலூர் நகராட்சி பகுதியில் 10 இடங்களில், புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், உழவர் சந்தை, கடைவீதி, வெங்கடேசபுரம் (கிருஷ்ணா தியேட்டர் அருகில்) எளம்பலூர் ரோடு, பெரியார் சிலை, பள்ளிவாசல், அஞ்சலக அலுவலக சாலை, மார்க்கெட் மற்றும் நான்கு ரோடு ஆகிய இதில் மூன்று இடமான புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், மற்றும் நான்கு ரோடு போன்ற இடங்களில் உடல் வெப்பநிலை பரிசோதனை, மையம் அமைக்கப்பட்டு கபசுர குடிநீரும் வழங்கப்படுகிறது.

தீபாவளி பண்டிகை வரை புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், மற்றும் நான்கு ரோடு ஆகிய இடங்களில் கொரோனா பரிசோதனை மையம் தொடங்கப்பட்டுள்ளது. மேற்கண்ட அறிகுறிகளில் ஏதாவது ஒன்று காணப்பட்டாலும் கொரோனா பரிசோதனை செய்துக்கொள்ள பிரத்யோகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பரிசோதனை மேற்கொண்ட நபருக்கு 24 மணி நேரத்திற்குள் பரிசோதனை முடிவு தெரிவிக்கப்படும். அதுவரை பரிசோதனை மேற்கொண்ட நபர் பொது இடங்களுக்கு செல்லாமல் வீட்டிலேயே இருக்க வேண்டும். பரிசோதனை நெகட்டீவ் ஆக இருந்தாலும் மேற்கொண்ட அறிகுறிகள் இருந்தால் அருகில் உள்ள அரசு மருத்துவமனையை அணுகி மருத்துவரிடம் ஆலோசனை பெற்று இரத்த பரிசோதனை, சி.டி ஸ்கேன், எக்ஸ்-ரே போன்ற பரிசோதனை செய்துக்கொள்ளலாம்.

அனைத்து விதமான தடுப்பு மருந்துகளும், தடுப்பு ஊசிகளும் போதுமான அளவில் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ளது. எனவே, பொது மக்கள் யாரும் தன்னிச்சையாக மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டாம். பொது மக்கள் மருத்துவரின் ஆலோசனையின் படி, அரசாங்கத்தினால் இலவசமாக வழங்கப்படும் சலுகைகளை சிகிச்சை முறைகளை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

கட்டாய முக கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைப்பிடித்தல், கிருமி நாசினி பயன்படுத்துதல், சோப்பு கொண்டு கை கழுவுதல் போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும்.
தமிழகத்திலேயே, மிக குறைந்த அளவில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட மாவட்டமாக பெரம்பலூர் மாவட்டம் உள்ளது. மேலும் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாற்றுவதில் மாவட்ட நிர்வாகம் எடுக்கும் ஒவ்வொரு சிறப்பான நடவடிக்கைக்கும் பொது மக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு அதில் கேட்டுக் கொண்டுள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!