College students protesting at Perambalur condemning the central state governments

நீட் தேர்வினால் மருத்துவ கல்வி பயில வாய்ப்பு கிடைக்காமல் போனதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூர் கிராமத்தை சேர்ந்த மாணவி அனிதாவின் உயிரிழப்பிற்கு இரங்கல் தெரிவித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி மாணவ, மாணவியர்கள் வகுப்புகளை புறக்கணித்து நேற்று, கல்லூரி நுழைவு வாயில் முன் தரையில் அமர்ந்து மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் போலீசார் பலத்த பாதுகாப்பு அளித்து வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் சாலைமறியில் போன்ற போராட்டங்களில் ஈடுபடாத வண்ணம் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497