Collision between car and private school bus: one person killed! Perambalur police investigation!!
பெரம்பலூர் மாவட்டம், அம்மாபாளையம் அருகே இன்று காலை, திருச்சி மாவட்டம், துறையூரை சேர்ந்த எஸ்.ஆர்.எம். (சவுடாம்பிகா) என்ற தனியார் பள்ளிக்கு சொந்தமான பேருந்து இன்று காலை சுமார் 7 மணி அளவில் சாலையின் இடது பக்க ஓரமாக பேருந்தில், பள்ளி மாணவர்களை ஏற்றிக் கொண்டிருந்தது. அப்போது எதிர் திசையில் தறிகெட்டு வந்த கார் சாலையின் ஓரத்தில் இருந்த கம்பத்தின் மீது பயங்கரமாக மோதி, பள்ளி பேருந்து மீது விழுந்தது.
இதில் பேருந்தின் பேட்டரி தூக்கி வீசப்பட்டது. அது பேருந்தின் உதவியாளர் (க்ளீனர்) பெரம்பலூர் அருகே உள்ள லாடபுரத்தை சேர்ந்த பச்சமுத்து (50) என்பவர் தலை மற்றும் முகத்தின் மீது விழுந்தில் காயம் ஏற்பட்டது. அவரை அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம், பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சிகிச்சை பெற்று வந்த அவர் மதியம் சுமார் 12 மணி அளவில் உயிரழந்தார்.
காரை ஓட்டி வந்த கள்ளக்குறிச்சி சிங்கிள்ராயலன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு விரிவாக்க அலுவலராக பணியாற்றி வரும் ரவிச்சந்திரன் (57) அவரும் காயமடைந்தார். அவரையும் அங்கிருந்தவர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல்சிகிச்சைக்காக, பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த பெரம்பலூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
காலையில் நடந்த அச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம், சேலம், அரியலூர், மாவட்டங்களை சேர்ந்த வாகன ஓட்டிகள் பெரும்பாலும் சாலையில் வாகனங்களை இயக்கும் போது நிதானம் , பொறுப்பு இல்லாமல் சர்.. புர் என ஓட்டுவதே, அடிக்கடி அந்த மாவட்டத்தினர் விபத்துக்களில் சிக்குவதற்கு காணரமாகிறது. இதனால், பெரம்பலூர் மாவட்ட மக்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, போலீசார், சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம்,அரியலூர், கடலூர் மாவட்ட வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, விபத்துக்களை தவிர்க்கும் வகையில், ஆங்காங்கே சமிக்கை பலகைகளை வைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ரேஸ் டிரைவிங் செய்பவர்களுக்கு உரிய அபராதம் விதிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.