coming soon, 6 colleges including Perambalur Medical College: TN State Health Secretary J. Radhakrishnan Info!

திருச்சி மகாத்மா காந்தி நினைவு மருத்துவக் கல்லூரியில் ஆய்விற்கு வந்த, சுகாதராம் மற்றும் குடும்ப நலம் துறை மாநில செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் தெரிவித்தாவது:

பெரம்பலூர் மருத்துவக் கல்லூரி உள்பட 6 கல்லூரிகளுக்கு மாநில அரசு, மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது. அதில் தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் 32 மருத்துவக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. மீதமுள்ள ராணிப்பேட்டை, மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மருத்துவக்கல்லூரிகளில் அறிவிக்கப்ட்டு 10 ஆண்டுகளாகியும் உள்ள பெரம்பலூர் மருத்துவக் கல்லூரி விரைவில் கொண்டு வர திட்ட அறிக்கை அனுப்பட்டு உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் கலந்து ஆலோசித்து உள்ளனர்.

கொரோனா கட்டுப்பாட்டில் உள்ளது. குரங்கு அம்மை நோய் தமிழகத்தில் எங்கும் கண்டறிப்படவில்லை. மேலும், அனைத்து விதமான நோய் தடுப்புகள் குறித்த முன்னேற்பாடு செய்ய மாவட்ட கலெக்டர்களையும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்தார்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!