Computer Operator with Assistant Vacancy: Eligible Candidates Apply: Perambalur Collector Info!
பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும், இளைஞர் நீதி குழுமத்தில் காலியாக உள்ள உதவியாளர் உடன் கலந்த கணினி இயக்குபவர் (ஒரு பணியிடம்) பணியிடத்திற்கு ஓராண்டு கால ஒப்பந்த அடிப்படையில் பணியாளர் நியமனம் செய்யப்பட உள்ளது, என கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும், இளைஞர் நீதி குழுமத்தில் உதவியாளர் உடன் கலந்த கணினி இயக்குபவர் பணியிடத்திற்கு பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி, தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு தேர்வில் மேல்நிலை தேர்ச்சி மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் கணினி கல்வியில் பட்டயப்படிப்பு பெற்று ஏதாவது ஒரு நிறுவனத்தில் கணினி இயக்குவதில் ஒரு வருடம் அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 31.08.2022 அன்று 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். உதவியாளர் உடன் கலந்த கணினி இயக்குபவர் பணியிடத்திற்கு ஒரு மாதத்திற்கு ரூ.11,916/- தொகுப்பூதியமாக வழங்கப்படும்.
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள் www.perambalur.nic.in என்ற வலைதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை 03.10.2022 அன்று மாலை 05.00 மணிக்குள் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, 164, இரண்டாவது தளம், எம்.எம்.பிளாசா, திருச்சி மெயின் ரோடு, பெரம்பலூர் – 621212. என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். மேலும் தகவல்களுக்கு 04328-275020 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பயனடையுமாறு தெரிவித்துள்ளார்.
விளம்பரம்: