A consumer awareness event on product selection was held at Andur village near kunnam in Perambalur District

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம், அந்தூர் கிராமத்தில் நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஊராட்சித் தலைவர் முருகேஸ்வரி செல்வராஜ் தலைமையில் நடந்தது. இதில் வழக்கறிஞர் சங்கர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி அவர் பேசியதாவது: பொதுமக்கள் நுகர்வோர் நீதிமன்றங்களை எப்படி அணுகுவது என்பது குறித்தும், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்கள் பற்றியும் எடுத்துக் கூறினார். தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கத்தின் மாநில தலைவரும், பெரம்பலூர் மாவட்ட குடிமக்கள் நுகர்வோர் மன்றங்களின் மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான கதிரவன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது, அவர் பேசியதாவது: நுகர்வோர்கள் விளம்பரங்களை நம்பி ஏமாறாமல் இருப்பது குறித்தும், பொருள்களை எப்படி தேர்வு செய்ய வேண்டும் என்பது குறித்தும், நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட கூடுதலாக பணம் கொடுக்கக் கூடாது என்றும், ஒவ்வொரு நுகர்வோர்களும் தமது தேவைக்கு பொருள்களை வாங்கும் பொழுது அரசு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள தர முத்திரைகளை பார்த்து வாங்க வேண்டும் என்பது குறித்தும் விளக்கமாக பேசினார். ஊராட்சி மன்ற உறுப்பினரும், சமூக ஆர்வலருமான ஜெகதீசன் ஒருங்கிணைப்பு செய்ததொடு நன்றியும் கூறினார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!