Costless housing Pattas for 443 beneficiaries: Perambalur Collector presents in the presence of MLAs

  பெரம்பலூர் மாவட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு வரன்முறைபடுத்தும் திட்டத்தின் கீழ் 443 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாவினை எம்.எல்.ஏக்கள்  ஆர்.டி.இராமச்சந்திரன் (குன்னம்),  தமிழ்ச்செல்வன் (பெரம்பலூர்) ஆகியோர் முன்னிலையில்  பெரம்பலூரில் நடந்த விழாவில்  கலெக்டர் வெங்கடபிரியா வழங்கினார்.

   தமிழக மக்களின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்காக ஏராளமான பல திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அரசு புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்தவர்களுக்கு வரைமுறைபடுத்தி சிறப்பு திட்டத்தின் கீழ் விலையில்லா வீட்டுமனைப்பட்டா வழங்கிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஒரு மனிதனுக்கு அடிப்படை தேவைகளான உணவு, உடை இருப்பிடம் ஆகியவற்றினை அனைவருக்கும் எவ்வித பாகுபாடின்றி ஏற்படுத்தி தருவதே சிறந்த நிர்வாகத்தின் அடிப்படையாகும்.

 அதனடிப்படையில் உணவுக்கு உத்தரவாதம் வழங்கிடும் பொருட்டு தமிழக மக்களுக்கு நியாய விலை கடைகள் மூலம் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லாமல் 20 கிலோ அரிசியினை மாதந்தோறும் வழங்கி வருகிறது. மனிதர்களின் அடுத்த அடிப்படை தேவையான உடைக்கு உத்திரவாதம் அளிக்கும் வகையில் கைத்தறி நெசவாளர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கி நிரந்தர வருவாயினை ஏற்படுத்தும் வகையிலும், குடும்ப அட்டைதாரர்கக்கு தமிழக அரசு விலையில்லா வேட்டி, சேலையினை ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது.

மனிதர்களின் அடுத்த அடிப்படை தேவையான இருப்பிடத்திற்கு உத்திரவாதம் அளிக்கும் வகையில் 2 செண்ட் வீட்டடி நிலம் உள்ளவர்கள்  அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், மற்றும் முதலமைச்சரின் சூரிய ஒளியுடன் கூடிய பசுமை வீடு கட்டும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக அரசு புறம்போக்கு நிலங்களில் தற்போது உபயோகப்படுத்தாத மற்றும் எவ்வித ஆட்சேபனையும் இல்லாத இடங்களில் 5 ஆண்டுகளுக்கு மேலாக குடிசை போட்டு வசிக்கும் பொது மக்களுக்கு அவர்களின் எதிர்கால நலன் மற்றும் தேவையினை கருத்தில் கொண்டு விலையில்லாமல் இலவசமாக வீட்டுமனை பட்டா வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதனடிப்படையில், பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் வட்டத்தில் 252 பேருக்கும், வேப்பந்தட்டை வட்டத்தில்  69 பேருக்கும், குன்னம் வட்டத்தில் 42 பேருக்கும், ஆலத்தூர் வட்டத்தில் 80 பேருக்கும் என மொத்தம் 443 நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டது.  இத்திட்டத்தின் மூலம் அனைவருக்கும் வீடு  என்கிற சூழ்நிலை உருவாகியுள்ளது. தமிழக அரசின் தொலைநோக்கு பார்வையில் செயல்படுத்தப்படும் இது போன்ற திட்டங்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழபைபு வழங்கி தங்களது வாழ்வினை வளமாக்கி கொள்ள வேண்டும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், பெரம்பலூர் சார் ஆட்சியர் பத்மஜா  உட்பட  வட்டாட்சியர்கள், வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர் டி.என்.சிவப்பிரகாசம் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!