Credit through Tamil Nadu Backward Classes Economic Development Corporation (TABCEDCO) : Perambalur Collector Information!

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

பெரம்பலூர் மாவட்டத்தில் 2022-23ம் ஆண்டு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் (TABCEDCO) கடன் திட்டத்தினை சிறப்புற செயல்படுத்திடவும், பிற்படுத்தப்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினை சார்ந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடவும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் (TABCEDCO) திட்டங்கள் மூலம் கடன் கோரி விண்ணப்பிக்கலாம்.

கடன் திட்டங்களின் கீழ் பயன்பெற பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவராகவும், ஆண்டு வருமானம் ரூ.3,00,000-கு மிகாமலும், விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்து 60 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.

பொது கால கடன் திட்டம், தனிநபர் கடன் திட்டம் மூலம் அதிகபட்சமாக ரூ.15,00,000- வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 6%-லிருந்து 8% வரை வசூலிக்கப்படுகிறது. பெண்களுக்கான புதிய பொற்காலத் திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ.2,00,000- வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விதிதம் 5% ஆகும். சிறுகடன் வழங்கும் திட்டத்தின் கீழ் சுய உதவி குழு மகளிர் உறுப்பினர் ஒருவருக்கு அதிபட்சமாக ரூ.1.00 இலட்சம் வரையும் குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.15.00 இலட்சம் வரையும் வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 4%. மகளிர் சுய உதவிக்குழு தொடங்கி 6 மாதங்கள் பூர்த்தியாகி இருக்கவேண்டும். திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) அவர்களால் தரம் (Grading) செய்யப்பட்டிருக்கவேண்டும்.

சிறுகடன் வழங்கும் திட்டத்தின் கீழ் சுய உதவிக் குழுவில் உறுப்பினராக உள்ள ஆடவருக்கு அதிகபட்சமாக ரூ.1.00 இலட்சம் வரையும் குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.15.00 இலட்சம் வரையும் வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 5%. ஒரு குழுவில் அதிகபட்சமாக 20 உறுப்பினர் அனுமதிக்கப்படுவார்கள். ஒரு பயனாளிக்கு ரூ.30,000- வீதம் 2 கறவைமாடுகள் வாங்க ரூ.60,000- வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 6% ஆகும்.

பெரம்பலூர் மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகபிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்த நபர்கள் மேற்படி கடன் விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல அலுவலகம், அனைத்து கூட்டுறவு வங்கி கிளைளில் பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சம்மந்தப்பட்ட கூட்டுறவு வங்கிகளில் சமர்ப்பிக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!