Students should learn with ambition while learning: Malaysian businessman Dato.S. Prakadeeshkumar speaks at Independence Day!

இந்திய தேசத்தின் 75 வது சுதந்திரதினவிழா வழக்கத்தை விட கூடுதல் உற்சாகத்துடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.அதன் ஒருபகுதியாக பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தினவிழா நடைபெற்றது.விழாவில் மலேசியா தொழிலதிபர்.டத்தோ S.பிரகதீஸ்குமார் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்தார்.மேலும் அவர் மாணவர்களுக்கு நோட்டு பேனா உள்ளிட்டவைகளையும்,பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத் தொகையும் வழங்கி பாராட்டினார்.பின்னர் அவர் பேசும் போது மாணவர்கள் தங்கள் எதிர்கால இலக்குகளை முடிவு செய்து தற்போதிருந்தே லட்சியத்துடன் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.மேலும் பூலாம்பாடி அரசு பள்ளியில் பயின்று மருத்துபடிப்பிற்கு நீட் தேர்வு எழுதியுள்ள மாணவர்களுக்கு தான் உதவிகளை செய்து தர தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.அதைத்தொடர்ந்து மாணவர்களின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.இந்த விழாவில் பள்ளித் தலைமை ஆசிரியர் சேகர்,பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மோகன்,பேருராட்சி தலைவர் பாக்கியலட்சுமி செங்குட்டுவன்,கவுன்சிலர் கலைச்செல்வி பாலகிருஷ்ணண்,உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!