Dharna with the family of electrical workers protesting against the change of job without investigation in the dispute with the Panchayat President’s husband!

பெரம்பலூர் அருகே உள்ள சோமண்டபுதூர் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (48). எசனையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில்,
கடந்த 27 .4. 2022 அன்று பணி நிமித்தமாக அலுவலகத்தில் இருந்த போது உதவி மின் பொறியாளரின் தொலைபேசியில் தொடர்பு கொண்ட எசனை ஊராட்சி மன்ற தலைவர் தலைவரின் கணவர் பன்னீர்செல்வம், மின்மாற்றி பழுது குறித்து பேசியதாகவும், அதற்கு கணேசன் கம்பியாரிடம் பேசுமாறும் உதவி மின் பொறியாளர் கூறியதன் அடிப்படையில் தெரிவித்துள்ளார்.

இதில், தலைவரின் பன்னீர்செல்வத்திற்கும், மின்வாரிய ஊழியருக்கும் வாக்குவாதம் போனில் ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து சுமார் பத்து நிமிடம் கழித்து மின்வாரிய அலுவலகத்துக்கு வந்த பன்னீர்செல்வம் கரண்டை அடிக்கடி நிறுத்துகிறீர்கள் தலைவர் என்னிடம் சொல்ல மாட்டியா என்றும் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியது மட்டும் இல்லாமல் அவரது கன்னத்தில் அறைந்து விட்டு குத்தியதாக கூறப்படுகிறது.

அங்கிருந்த சக ஊழியர்கள் தடுத்து நிறுத்தியதாகவும், உதவி மின் பொறியாளர் காவல்துறையிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை தெரிவித்த அவர், ஆனால் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் பன்னீர்செல்வம் தவறாக பல்வேறு புகார்கள் அளித்த அடிப்படையில் கணேசன் கம்பியாளரை அரியலூர் மாவட்டம் தேளூர் பிரிவிற்கு இடமாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது.

எவ்வித உரிய விசாரணை மேற்கொள்ளாமல் கம்பியாளர் கணேசன் அளித்த புகார் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் காவல்துறை புகார் நிலுவையில் இருக்கும் பொழுதும், அதிகார தோரணையில் இடமாற்றம் செய்ததை ரத்து செய்ய வேண்டும் என்றும் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு இன்று காலை தனது குடும்பத்தோடு போராட்டம் நடத்தினார்.

பின்னர், மேற்பார்வை பொறியாளர் அவர்கள் உடனடியாக தலையிட்டு இடமாறுதல் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கையும் வைத்தார். இந்த சம்பவத்தால் மின் ஊழியர்களிடையே பரபரப்பை உண்டாக்கியது, அங்கு வந்த மின்வாரிய அதிகாரிகள் கணசனிடம், சமாதான பேச்சு வார்த்தை நடத்தி ஓரிரு நாட்களில் தீர்வு அளிப்பதாக தெரிவித்தன் பேரில் குடும்பத்துடன் கலைந்து சென்றார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!