did not get the News ! Regrettably, the district collector to teachers!

news_events பெரம்பலூர் மாவட்ட ஆட்சிப் பணியாளர் க.நந்தக்குமார் பொறுப்பேற்ற பிறகு ஒரு குறிப்பிட்ட ஆங்கில நாளிதழுக்கு முனைப்பாக சிபாரிசு செய்து நாளிதழ்களின் எண்ணிக்கையை பெருக்க பள்ளி ஆசிரியர்கள் வாங்கி மாணவர்களுக்கு படிக்க கொடுக்க வேண்டுமென வாய்மொழியாக உத்திரவிட்டார். ஆனால், இவர் எதிர்பார்த்த அளவிற்கு அந்த ஆங்கில நாளிதழ்களில் அரசு பள்ளி செய்திகள் வெளியாகவில்லை. நாளிதழின் கொள்கைளை தெரிந்து கொள்ளாத ஆட்சியர், ஆசிரியர்கள் கூட்டத்தில், வெளிப்படையாக சந்தில் ஏன் அரசு பள்ளி செய்திகள் அதிகம் வெளியாக வரவில்லை என கேட்டு வருத்தப்பட்டுக் கொண்டார்.

ஆங்கில நாளேட்டை மட்டும் ஒருவர் படித்தால் மட்டும் பெரிய ஆங்கில புலமையில் பண்டிதராகிவிட முடியாது. முதலில் ஆங்கிலத்தில் அல்லது ஒரு மொழியில் புலமை பெற வேண்டுமானால், முதலில் தாய் மொழியில் உள்ள சொற்கள், சொற்தொடர்கள், வாக்கிய அமைப்புகள், இலக்கணம், இலக்கியம் ஆகியவற்றை வாசித்து தெரிந்து கொள்ள வேண்டும். மாணவன் என்றால் 6 முதல் 8 ம் வகுப்பிற்குள் இவைகளை கற்றறிய செய்தால் நல்லொரு புலமையை அடைய முடியம். அதைவிடுத்து நேரடியாக ஆங்கில நாளேடு வாசிக்க மட்டுமே முடியும், அதன் பொருளை புரிந்து கொள்ள முடியும் என்பது கல்வியாளர்களுக்கு தெரியும். ஆட்சியர் சொல்வதால் தட்ட முடியாமல் ஆசிரியர்கள் அல்லாடி வருகின்றனர்.

தாய்மொழியில் செம்மையான ஒருவரால் மட்டுமே பிற மொழியிலும் புலமை பெற முடியும் என்பதை ஆட்சியர் உணர வேண்டும். எனவே அரசு பள்ளி மாணவர்களுக்கு, இலக்கணம், இலக்கியம், கதை கட்டுரைகள், சொல்லகராதியை பயன்படுத்த பயிற்சி அளிக்க வேண்டும். அரசு பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தில் புலமை பெற சிறந்த கல்வியாளர்களுடன் ஆலோசனை பெறுவதே நன்று.

செய்திகளை தமிழ் நாளேடுகள் போட்டி போட்டுக் கொண்டு தினமும் அளித்து வருகின்றன. ஆனால், ஆட்சியர் இவர்களை அலட்சியப் படுத்தியற்கு நல்லொரு அனுபவபத்தை பெற்றிருக்கிறார் என ஆசிரியர்கள் அகம் மகிழந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!