District administration ignored: Melapuliyur lake flows in water: farmers suffer
பெரம்பலூர் மாவட்டம், மேலப்புலியூரில் லாடபுரம் செல்லும் சாலையில் ஏரி ஒன்று உள்ளது . இந்த ஏரிக்க பச்சமலையில் இருந்து தண்ணீர் வந்து சேரும். பழங்காலம் முதலலே பச்சையில் இருந்து வழிந்து வரும் மழை நீரை தேக்கி வைத்து விவசாயம் செய்து வருகின்றனர். இந்த ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீர் செஞ்சேரி, பெரம்பலூர், துறைமங்கலம், வழியாக சென்று மருதையாறாக உருவெடுக்கிறது.
மாவட்ட அதிகாரிகள் மக்களுக்கு பயன் தரும் காரியங்களை செய்யாமல் கமிசன் வரும் திட்டங்களை செய்து வருகின்றனர் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம். பெரிய பெரிய திட்டங்கள் தீட்டுவதன் மூலம் அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு அதிகளவு சதவீத கமிசன் கிடைக்கும். ஆனால், சிறு சிறு அதாவது 50 ஆயிரம், ஒரு லட்சம் போன்ற பணிகளை கையில் எடுப்பதால் மிக சொற்ப பணமே கமிசனாக பிரித்து கொள்ள முடியும். இதனால் ஆயிரங்கள் மதிப்பில கொண்ட பணிகளை செய்ய ஆர்வம் காட்டுவதில்லை.
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மேலப்புலியூர் ஏரி யின் கடகால் பகுதி உடைந்து காணப்படுவதாக அறிவித்தும் எந்தவொரு அதிகாரியோ, அரசியல்வாதியோ அக்கறை காட்டவில்லை. அதை கட்டி முடிக்க சுமார் 20 ஆயிரம் அல்லது அதிபட்சமாக 50 ஆயிரம் செலவாகும்.
பாழாய் போன பல திட்டங்களில் பணத்தை வாரியிறைத்து கமிசன் பார்ப்பதே வாடிக்கையாகிவிட்டது. தேவையற்ற பல நிகழச்சிகள், திட்டங்கள் பல கோடி ரூபாய் மக்கள் பணத்தை வீணாக்கி வருபவர்கள், மேலப்புலியூர், லாடபுரம் பகுதி விவசாயிகளின் நலன் காக்கவும், நிலத்தடி நீர்மட்டம் உயர அக்கறை செலுத்த வில்லை.
நேற்று இரவு பெய்த மழை நீரை சேமிக்க முடியால் உடைக்கப்பட்ட கடகால் கல்வரிசையை சீரமைக்காததால் நிரம்பி வழிய வேண்டிய ஏரியில் இருந்து வீணாய் வாய்க்காலில் பாய்ந்து சென்றது. இது அப்பகுதி மக்களிடையே அரசு மீதும், அதிகாரிகள் மீதும் அதிருப்தியை உண்டாக்கி வருகிறது.