Diwali Kadar Special Discount Sale at Khadicraft Store: Launched by Collector in Perambalur!\

பெரம்பலூர் மாவட்டத்தில், அண்ணல் காந்தியடிகள் அவர்கள் 154 வது பிறந்த நாளினை முன்னிட்டு, செய்தி மக்கள் தொடர்புத்துறை மற்றும் தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியத்தின் சார்பில் உள்ள காதி கிராப்ட் அங்காடியில் அண்ணல் காந்தியடிகளின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, தீபாவளி கதர் சிறப்பு தள்ளுபடி விற்பனையை தொடங்கி வைத்தார். இதில் சிறப்பு விருந்தினராக மாவட்ட ஊராட்சி சேர்மன் சி.ராஜேந்திரன் கலந்து கொண்டார்.

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்திற்குள் காதி கிராப்ட் செயல்பட்டு வரும், அக்கடைக்கு, வருடாந்திர கதர் விற்பனை குறியீடாக 2021-22 ஆம் ஆண்டிற்கு ரூ.21.32 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டதில் ரூ.12.52 லட்சம் விற்பனை எய்தப்பட்டுள்ளது. கிராமப் பொருட்கள் விற்பனை ரூ.38.38 லட்சம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இவ்வாண்டு (2022-23) கதர் விற்பனைக்கு ரூ.55.00 லட்சம் குறியீடாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அரசு துறைகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கு மாத ஊதியத்தில் 10 சம தவனைகளில் பெற்றிடும் வகையில் கடனுக்கும் கதர் ரகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொது மக்கள் மற்றும் அரசுத் துறை ஊழியர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் கதர் அங்காடிகள் செயல்படும். எனவே, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுத்துறை நிறுவனங்கள், பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும், நகராட்சி, ஊராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் போக்குவரத்து கழகங்களை சார்ந்த அனைத்து ஊழியர்களும், பொது மக்களும் கதர், பட்டு, பாலியஸ்டர், உல்லன் ரகங்கள் மற்றும் கிராம பொருட்கள் தள்ளுபடி விலையில் கொள்முதல் செய்து பயனடைவதோடு இம்மாவட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட விற்பனை குறியீட்டினை எய்திட ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

முன்னதாக காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு, இந்திய சுதந்திர அமைப்பு குறித்த விழிப்புணர்வு ஓட்டத்தினை டி.ஆர்.ஓ நா.அங்கையற்கண்ணி தொடங்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு ஓட்டமானது மாவட்ட ஆட்சியரகத்தில் தொடங்கி பாலக்கரை வழியாக சென்று மீண்டும் மாவட்ட ஆட்சியரகத்தில் நிறைவு பெற்றது. பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என 50 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். ஓட்டத்தை மாவட்ட விளையாட்டு அலுவலர் சுரேஷ் ஏற்பாடு செய்திருந்தார்.

போலீஸ் எஸ்.பி மணி, டி.ஆர்.ஓ அங்கையற்கண்ணி, ஆர்டி.ஓ நிறைமதி, பெரம்பலூர் நகராட்சி தலைவர் அம்பிகா ராஜேந்திரன், துணைத் தலைவர் ஹரிபாஸ்கர், நகராட்சி ஆணையாளர் (பொ) மனோகரன், பெரம்பலூர் காதிகிராப்ட் மேலாளர் இளங்கோ, பெரம்பலூர் தாசில்தார் கிருஷ்ணராஜ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!