DMK candidate SS Sivasankar files nomination in Kunnam
பெரம்பலூர் மாவட்டம்,குன்னம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிடும், எஸ்.எஸ்.சிவசங்கர் என்பவர் குன்னம் சட்ட மன்ற தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட வழங்கல் அலுவலருமான எஸ்.சங்கரிடம் தனது வேட்பு மனுவை நேற்று தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கல் செய்ய திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.சிவசங்கர் தேர்தல் நடத்தும் அலுவலகத்துக்கு வந்த போது, சுயேச்சை வேட்பாளர் உலிபுரம் செல்வராஜ் மனுதாக்கல் செய்து கொண்டிருந்ததால் அரை மணி நேரத்திற்கு மேலாக அலுவலகத்திலேயே காத்திருந்து தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவருடன் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம் ஆகியோர் உடன் இருந்தனர்.