DMK Leader visit Perambalur, party people is an enthusiastic welcome to MK Stalin
திருச்சியில் இருந்து சென்னைக்கு பெரம்பலூர் வழியாக சென்ற மு.க.ஸ்டாலினுக்கு பெரம்பலூர் மாவட்ட திமுகவினர் மாவட்ட செயலாளர் குன்னம் சி.ராஜேந்திரன் தலைமையில் துறைமங்கலம் 3 ரோடு பாலம் முகப்பில் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
அப்போது அங்கு வந்த திமுக கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்தவர்களிடம் கையசைத்து விடை பெற்றார். காரில் முன்னாள் மந்திய ராஜா உடன் இருந்தார். ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி (ஆலத்தூர்), நல்லத்தம்பி( வேப்பந்தட்டை ), அண்ணாத்துரை ( பெரம்பலூர்), பெரம்பலூர் நகர செயலாளர் ம.பிரபாகரன், வாலிகண்டபுரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன், உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அப்போது அங்கு குழுமி இருந்தனர். பெரம்பலூர் போலீசார் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.