DMK Women’s Wing, Women’s Volunteer Conference Meeting in Namakkal: Gandhiselvan Announcement
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் காந்தி செல்வன் விடுத்துள்ள அறிக்கை :
நாமக்கல் கிழக்குமாவட்டத்திற்குஉட்பட்டநகர,ஒன்றிய,பேரூராட்சிகளில் மகளிர் அணி,மகளிர் தொண்டரணி கலந்தாய்வுகூட்டம் நாளைமறுநாள் (24ம் தேதி) சனிக்கிழமை எனது தலைமையில் நடைபெறுகிறது. காலை 9மணிக்கு புதுச்சத்திரம் தெற்கு ஒன்றியம் சக்கரவர்த்தி இல்லம் புதன்சந்தையிலும், 9.30 மணிக்கு புதுச்சத்திரம் வடக்கு ஒன்றியம் கவுதம் இல்லம், 10மணிக்கு ராசிபுரம் ஒன்றியம் பிள்ளாநல்லூர் பேரூராட்சி பட்டணம் பேரூராட்சிக்கு ஆண்டலூர் கேட்டில் உள்ள பாலமுருகன் இல்லத்திலும்,
11 மணி வெண்ணந்தூர் ஒன்றியம், பேரூராட்சி, அத்தனூர் பேரூராட்சிகளுக்குஆட்டையாம்பட்டி பிரிவு ரோட்டில் உள்ள ஒன்றிய அலுவலகத்திலும், மதியம் 12 மணிக்கு ராசிபுரம் நகரத்திற்கு சங்கர் இல்லத்திலும், 1மணிக்கு நாமகிரிப் பேட்டை ஒன்றியம், பேரூராட்சி, சீராப்பள்ளி பேரூராட்சி, ஆர்.புதுப்பட்டிபேரூராட்சிக்குக்கு சீராப்பள்ளியில் உள்ள செல்வராஜ் இல்லத்திலும் கலந்தாய்வு கூட்டம் நடைபெறுகிறது.
மதியம் 2 மணிக்கு சேந்தமங்கலம் ஒன்றியம் காளப்பநாயக்கன்பட்டிபேரூராட்சி,சேந்தமங்கலம் பேரூராட்சிகளுக்கு சேந்தமங்கலம் ஒன்றியஅலுவலகத்திலும், மாலை 3மணிக்கு எருமப்பட்டிஒன்றியம்,பேரூராட்சி, 4மணிக்கு மோகனூர் கிழக்கு ஒன்றியம் மோகனூர் பேரூராட்சி, 5மணிக்கு நாமக்கல் ஒன்றியம், மாலை 6மணிக்கு நாமக்கல் நகரம் ஆகிய கலந்தாய்வு கூட்டம் நாமக்கல் மாவட்டதிமுகஅலுவலகத்திலும் நடைபெறுகிறது.
கூட்டத்தில் சார்புஅணிநிர்வாகிகள் தொடர்பாகவும் மற்றும் கட்சியின் வளர்ச்சிப்பணிகள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது. எனவேஅந்தந்தபகுதியில் நடைபெறும் கூட்டத்திற்குஅந்தந்தபகுதிமகளிர் அணி,மகளிர் தொண்டர் அணி ஆகிய அணிகளுக்குவிண்ணப்பித்தர்கள், நகராட்சி, ஒன்றிய, பேரூராட்சி கட்சி நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள், ஊராட்சி செயலாளர்கள் கலந்தாய்வு கூட்டத்திற்கு அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளார்.