Do not believe the fake information published in my name on social media: Perambalur Collector notice!

Photo Credit : Perambalur.nic.in

பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

பெரம்பலூர் கலெக்டரான எனது புகைப்படத்தை காட்சிப் படமாக (Display Picture – DP) பயன்படுத்தி வாட்ஸ்அப் மற்றும் முகநூல் வாயிலாக போலி எண்கள் மற்றும் கணக்குகள் மூலம் அரசு அலுவலர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களிடம் பணம் கேட்கும் மோசடி முயற்சிகள் பல்வேறு மாவட்டங்களில் நிகழ்ந்து வருகிறது.

எனது பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தி அலைபேசி எண்களில் இருந்தோ அல்லது முகநூல் கணக்குகளில் இருந்தோ யாருக்கேனும் பணம் கேட்பது தொடர்பான போலி தகவல்கள் கிடைக்கப் பெற்றால் உடனடியாக அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.

பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தயவு செய்து விழிப்புடன் இருந்து இதுபோன்ற மோசடி கும்பல்களை அடையாளம் கண்டு வெளிச்சத்திற்கு கொண்டுவர ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!