Doctors Absent in Government Hospital near Perambalur: Public Blockade to Condemn District Administration!


பெரம்பலூர் மாவட்டம், பூலாம்பாடியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இதில், பூலாம்பாடி, பெரியம்மாபாளையம், கடம்பூர், கள்ளபட்டி, வேப்படி – பாலக்காடு மேலக்குணங்குடி, புதூர், பாரதி நகர் உட்பட மலை அடிவார கிராமப் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாள் ஒன்றுக்கு சுமார் 200 மேற்பட்ட வெளிப்புற நோயாளிகளாக வந்து சிகிச்சைக் எடுத்து கொள்கின்றனனர்.

மாவட்டத்தின் கடைப்பகுதி என்பதாலும், ஏழை எளிய மக்கள் என்பதாலும், அப்பகுதி மக்கள் இந்த அரசு ஆரம்பசுகாதார நிலையத்தை பெரிதும் நம்பியுள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை முதல் பூலாம்பாடிஅரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு டாக்டர் பணிக்கு வர வில்லை என கூறப்படுகிறது. நோயாளிகள் சிகிச்சை கிடைக்காமல் வீடுகளுக்கு திரும்பினர்.

பிரவசத்திற்காக பெண்களும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். டாக்டர்கள் பணிக்கு வராததால், கவலை அடைந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பூலாம்பாடி சுற்று வட்டார பொதுமக்கள் ஒன்று திரண்டு. ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பணியில் இருந்த நர்சு ஒருவரே, நேற்று மாலை முதல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவித்தார்.

நர்சிடம் வாக்குவாதம் செய்த பொதுமக்கள் பூலாம்பாடி அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்திற்கு அடிக்கடி டாக்டர்கள் வருவதற்கு ஆர்வம் காட்டுவது கிடையாது என்று தெரிவித்தனர். இதனால் மலைவாழ் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டினர். பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. மாவட்ட நிர்வாகம் கடைக்கோடி மக்களும் வரி கட்டும் எஜமான் என்பதை உணர வேண்டும்.

ஓட்டுக்காக மட்டும் மலைப்பகுதிகளுக்கு வருகை தரும் பெரம்பலூர் சேலம் மாவட்ட அரசியல்வாதிகள் வெற்றி பின்னர் ரூ. 300 கொடுத்து விட்டதால் அவர்களை கண்டுகொள்வதே இல்லை என்பதே அவர்களின் குற்றச்சாட்டாக உள்ளது. அதைவிட மக்கள் வரிப்பணத்தில் ராஜ வாழ்க்கையில் சொகுசாக வாழும் அதிகாரிகளும் கண்டும் காணமல் தங்களுக்கு வரவேண்டியதை மட்டுமே கருத்தாக கொண்டு பெரம்பலூர் – சேலம் மாவட்ட அதிகாரிகள் இருப்பது இந்த காலத்திலும் வேதனைக்குரியது.

கிராமப்புற மக்களுக்கு ஆர்வமாக சேவை செய்யும் மருத்துவர்களை நியமனம் செய்து அவர்களுக்கு கூடுதல் வசதிகளையும் செய்து கொடுத்து இரு மாவட்ட நிர்வாகங்களும் முன்வரவேண்டும் என்பதோடு மீண்டும் சிறந்த சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!