Drunken rowdies in Perambalur; Hotel employee injured! Rowdy beating himself up!

பெரம்பலூர் பாலக்கரையில் இன்று மாலை மோட்டார்சைக்கிளில் வந்த வாலிபரை 6 பேர் கொண்ட கும்பல் கட்டை மற்றும் குச்சியால் சராமரியாக தாக்கி விட்ட தப்பி சென்றனர் .

இதுகுறித்து அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு கொடுத்த தகவின் பேரில் பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் தலைமையில் விரைந்த வந்த போலீசார் அங்கு சண்டையிட்டு கொண்டு இருந்தவர்களை பிடித்து நடத்திய விசாரணையில், பெரம்பலூர் கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள ஹோட்டலில் மாஸ்டராக வேலை பார்த்து வருபவர் அத்தியூரை சேர்ந்த கருணாநிதி மகன் அருண் (வயது 20). இவர் அவரது சூப்பரவைசர் கார்த்திக் என்பவரை இறக்கி விடுவதற்காக பாலக்கரையில் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். அப்போது அங்கு நின்றிருந்த வினோத், மணிகண்டன் இருவரும், நெடுவாசலா என கேட்டு, பைக்கின் கண்ணாடியை உடைத்த கும்பல், சிற்றுண்டி கடை முன்பு கிடந்த கட்டையை எடுத்த சராமரியாக தாக்கினர். தாக்குதலை தாங்கமுடியாத அருண் தப்பிப்பதற்காக ஓடினார். , அப்போதும் விடாமல் தாக்கிவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பியதும் தெரியவந்தது, பின்னர். வினோத் தாக்கியவரை பார்க்க வந்த போது அங்கிருந்தவர் எடுத்த வீடியோவை பார்த்து கண்டுபிடித்து வினோத்திற்கு தர்ம அடி கொடுத்தனர். பின்னர் வினோத் தன்னைத் தானே குச்சியால் தாக்கி கொண்டான். அங்கிருந்த போலீசார் மடக்கி பிடித்து, வேனில் ஏற்று சென்று நடத்திய விசாரணையில் இன்று மாலை 3 மணிக்கு நெடுவாசலில்  ஒருவரை தாக்கி விட்டு வந்ததும், அவர்கள் உறவினர்கள்தான் தங்கள் கும்பலை தாக்க வருகிறார்கள் நினைத்து ஓட்டல் ஊழியரை தாக்கியதாகவும் தெரிவித்தான். வினோத், தமிழ்ச்செல்வன் ஆகிய இருவர் மீதும் கொலை, கொள்ளை வழக்குகள் இருப்பதும் ரவுடி பட்டியலில் பெயர்கள் இருப்பதும் தெரியவந்தது. புதிய வரவாக இணைந்துள்ள 4 புதிய பயிற்சி ரவுடிகளையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.  பொதுமக்கள் மற்றும் முக்கிய அலுவலங்கள் உள்ள சாலையில் அப்பாவி ஊழியரை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!