Due to Perambalur MLA’s delay, the students who came to the government function had to wait for 3 hours in the pouring rain!

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில், உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு, இன்று காலை சிறப்பு பேரணி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், மாவட்ட குடும்ப நல செயலகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சி காலை 10.30 மணியில் இருந்து 11 மணிக்குள் நடப்பதாக அறிவிக்கப்பட்டு, முன் கூட்டியே மாவட்ட கலெக்டர் வெங்கடபிரியா மற்றும், பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரனிடம் உரிய அனுமதி பெற்று விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

இதற்காக தனியார் நர்சிங் கல்லூரி மாணவிகளை அழைத்து வந்து பேரணிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். அதற்காக வந்த மாணவிகள் சுமார் காலை 9.30 மணியில் இருந்து கையில் பதாகைகளை கையில் வைத்து கொண்டு தாயராக இருந்தனர். மணி 10.30 மற்றும், 11 மணி ஆகியும் தெரிவிக்கப்பட்ட படி பெரம்பலூர் எம்.எல்.ஏ வரததால், கலெக்டர் வெங்கடபிரியா அவர் தனது அறையில் பணியை பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால், மாணவிகள் பதாகையுடன், தற்போது தென்மேற்கு பருவக்காற்றால் விட்டு விட்டு பெய்து வரும் சாரல் மழையில் நனைந்து கொண்டே வெறுப்புடன் எப்போதுதான் நிகழ்ச்சி நடக்கும் என திறந்த வெளியில் காத்திருந்தனர்.

பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன், காலையிலேயே வேப்பந்தட்டை ஒன்றியம் மற்றும் எசனை, வடக்கு மாதவி உள்ளிட்ட ஊர்களில் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சுமார் 12.15 மணிக்கு கலெக்டர் ஆபிஸ் வந்தார். பின்னர், கலெக்டருடன் கொடியசைத்து விழிப்புணர் வாகனத்தை தொடங்கி வைத்தார். மேலும், கால்வலிக்க மாணவிகள் நின்றதால் விழிப்புணர்வு பேரணி ரத்து செய்யப்பட்டது. மாணவிகள் விட்டால் போதும் என வெறுப்புடன் கலைந்து சென்றனர். மேலும், நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு மஞ்சப்பையுடன், மரக்கன்றுகள் மாவட்ட குடும்ப நல செயலகம் சார்பில் வழங்கப்பட்டது.

பொது வாழ்க்கையில் உள்ளவர்களின் பதவி என்பது ஓட்டு போட்ட சாமானியன் பிரதிநிதி என்பதை அதிகாரிகள், அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும். அதோடு அரசியல்வாதிகள், அதிகாரிகள் தன்னை கடவுளின் அவதாரமாக நினைத்து கொள்வதை விட்டு விட்டு, காலந் தவறாமல் குறித்த நேரத்தில் விழாவிற்கு வருகை புரிய வேண்டும், அல்லது, அந்த நிகழ்ச்சியை வேறு யார் மூலமாவது நடத்த தெரிவித்தால் இது போன்ற சம்பவங்கள் நடக்கமால் தவிர்க்கலாம்.

பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் ஆ.இராசா ஆகியோரை பார்த்தாவது நேரந்தவறாமையை கடைபிடிக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!