Equality Pongal at Perambalur District All Painters and Artists Association!
பெரம்பலூர் எளம்பலூர் சாலை உப்போடை அருகே உள்ள பெரம்பலூர் மாவட்ட அனைத்து பெயின்டர்கள் மற்றும் ஓவியர்கள் சங்கம் (கோவை) சமத்துவ பொங்கல் திருவிழா மாவட் தலைவர் பாலசுப்ரமணியன் தலைமையில் நடந்தது.
கவுவத் தலைவர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். மாநில துணை தலைவர் உதயகுமார், மாநில ஒருங்கிணைப்பாளர் யோகதாஸன், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் திருவிழாவை தொடங்கி வைத்து பேசினார். மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.பி. கிட்டு (எ) கிருஷ்ணசாமி அனைவைரையும் வரவேற்றார். பெரம்பலூர் மாவட்ட அனைத்து பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்கள் சங்கம் நிர்வாகிகள் ராம்குமார், ரவிச்சந்திரன், செந்தில்குமார், ரமேஷ், ரவி, இப்ராஹிம், தர்மா, மகளிரணி புவனேஸ்வரி, மற்றும் பலர் கலந்து கொண்டனர். மாவட்ட செயலாளர் ரமேஷ் அர்ச்சுனா நன்றி கூறினார்.