Exhibition and Seminar on Career Guidance at Veppanthattai Government College
தமிழக அரசின் சார்பில் போட்டித் தேர்வுகளில் எளிதில் தேர்ச்சி பெறும் வண்ணம் மாணவ,மாணவிகளுக்கு கல்லூரி படிக்கும் காலங்களிலிலிருந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்களுக்கான தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நிகழ்ச்சியை ஒவ்வொரு வருடமும் நடத்திட அரசால் ஆணை வழங்கப்பட்டுள்ளது அதனைத் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பாக தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
போட்டித் தேர்வுகள் தொடர்பான புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டன மாணவர்கள் பயன்பெறும் வகையில் TNPSC, UPSC, வங்கித் தேர்வுகள் TET, NEET தேர்விற்கு உரிய புத்தகங்களும் போட்டித் தேர்வுகளில் மாதிரி வினாத்தாள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது என கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா தெரிவித்தார்.