Extension of time to obtain permission for unauthorized educational institution buildings: Perambalur Collector Information!

பெரம்பலூர் மாவட்டத்தில் நகர் ஊரமைப்பு இயக்கத்தின் எல்லைக்குள் அமையும் திட்டமில்லா பகுதிகளில் 01.01.2011 -ற்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கிவரும் அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு இத்துறையால் அனுமதி வழங்கும் திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் அரசாணை எண் 76 ,வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி ( நா.வா(3)) துறை நாள்:22. 03 .2021 முதல் 04.04.2021 வரை காலத்தில் விண்ணப்பித்தவர்கள் உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகங்களை அணுகி அனுமதி பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

மேலும் மீண்டும் கல்வி நிறுவனங்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் ஆன்லைனில் விண்ணப்பிக்க www.tn.gov.in/tcp 01.07. 2022 முதல் கூடுதலாக ஆறு மாத காலத்திற்கு கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. அரசாணையில் தெரிவித்துள்ள ஆவணங்களை சமர்ப்பித்து அனுமதி பெற்றுக்கொள்ளுமாறும், பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!