Farmers and agricultural workers struggle waiting
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் காத்திருக்கும் போராட்டத்தை தொடங்கினர்.
பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளார்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தொடங்கி 3 நாட்களுக்கு காத்திருக்கும் போராட்டத்தை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டத்தை விவசாய சங்க மாநில துணைத் தலைவர் முகமதுஅலி தலைமையில் நடத்தி வருகின்றனர்.
முன்னதாக புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்ட விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் பேரணியாக தொடங்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தடைந்தனர்.
பெரம்பலூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து தற்கொலை செய்து கொண்ட உழவர்களுக்கு 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், பாதிப்படைந்த விவசாயிகளுக்கு பயிருக்கு ஏற்றவாறு இழப்பீட்டு தொகை வழங்க கோரியும், கால்நடைகளுக்கு தீவன மானியம் வழங்க கோரியும், கரும்பிற்கு டன் ஒன்றிற்கு ரூ.4 ஆயிரம் வழங்க கோரியும், ஆலைகளில் கொள்முதல் செய்த கரும்புக்குரிய பழைய பாக்கியை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருக்குமம் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதில், பெரம்பலூர் மாவட்ட விவசாய சங்க மாவட்ட செயலாளர் என்.செல்லதுரை மற்றும் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களை சேர்ந்தவர்கள் இந்த போராட்த்தில் கலந்து கொண்டனர்.