Farmers Association thanks to Tamilnadu Chief Minister M.K. Stalin in Perambalur

தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், பெரம்பலூருக்கு வந்த, தமிழக முதலமைச்சர், தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் ஆர்.ராஜாசிதம்பரம் தலைமையில், ஆ.ராசா எம்.பி முன்னிலையில் 3 மனுக்களை கொடுத்தனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சீரிய தலைமையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில், சிறப்பான முறையில் விவசாயிகளுக்கென தனி பட்ஜெட் அறிவித்து பல்வேறு விவசாய நலத் திட்டங்களை செயல்படுத்தி வருவதற்காக முதலமைச்சருக்கும், தமிழக அரசிற்கும், நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம் என்றும்,

தங்களது சிறப்பான திட்டங்களினால், பெரம்பலூர் மாவட்டம் விவசாய் விளைப்பொருட்கள் உற்பத்தியில் சிறப்பான இடத்தினை பெற்றுள்ளது. அந்த வகையில் சின்னவெங்காயம் சாகுபடியானது பெரம்பலூர் மாவட்டத்தில் ஆண்டிற்கு சுமார் 22,500 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு மாநில அளவில் சிறப்பான அளவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

தமிழக அரசின் தோட்டக்கலைத்துறை மூலம் மத்திய அரசின் மானிய நிதி உதவியுடன் சின்னவெங்காய சேமிப்பு கொட்டகை அமைக்க 1 யூனிட்டிற்கு (25 மெட்ரிக் டன்கள்) 50% மானியமாக ரூ.87,500/- வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 7 ஆண்டுகளாக கொட்டகை அமைக்கத் தேவையான மூலப் பொருட்களான இரும்பு மற்றும் தகரம் போன்றவற்றின் விலை பல மடங்காக உயர்ந்துள்ள நிலையில் 1 யூனிட் கொட்டகை அமைக்க விவசாயிகள் சுமார் ரூ.2.5லட்சம் வரை செலவு செய்ய வேண்டியுள்ளது. ஆகவே தற்போதைய விலை உயர்விற்கு ஏற்ப 50% மானியத்தினை ரூ.1.25லட்சம் என்ற அளவில் உயர்த்தி வழங்கிட மத்திய அரசிடம் வலியுறுத்தி பெற்று தந்திடுமாறும்.

பெரம்பலூர் மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கடன் சங்கங்களில் பொது நகைக்கடன் (5பவுனுக்குள்) தள்ளுபடி பெற தகுதியானவர்கள் என்று தேர்வு செய்தவர்களுக்கு தள்ளுபடி சலுகை வழங்க கோரியும், பெரம்பலூர் மாவட்டத்தில் 53 தொடக்க வேளாண்மை கடன் சங்கங்களில் பொது நகைக்கடன் (5பவுன்) தள்ளபடிக்கு தகுதியிருந்தும் தள்ளுபடி சலுகை இதுவரை கிடைக்கவில்லை.

5பவுன் நகைக் கடன் தள்ளுபடி சலுகை கிடைக்காத 645 பேர் இணைபதிவாளர் அலுவலகத்தில் மேல் முறையீடு செய்து 8 மாதங்களுக்கு மேலாகிறது. இதில் நகைக்கடன் தள்ளுபடி செய்ய 194 பேர்கள் தகுதியானவர்கள் என்ற விாத்தினை சென்னையில் உயர் அதிகாரிக்கு அனுப்பியதாகவும், அவர்கள் அனுமதி கிடைத்- தவுடன் தான் நகைக்கடன் தள்ளுபடியாகும் என்று பெரம்பலூர் கூட்டுறவு இணைபதிவாளர் அலுவலகத்தில் தெரிவிக்கின்றனர். தள்ளபடி இதுபற்றி உரிய ஆய்வு செய்து இபவுன் நகைக்கடன் நிகை கிடைத்திட ஆவண செய்திட தமிழக முதலமைச்சர் அவர்களை விவசாயிகளின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம், என அதில் தெரிவித்துள்ளனர்.

மேலும், மின்வாரியம் ஆதார் இணைப்பை முறைப்படுத்தவும், பெரம்பலூர் மின்கட்டண வசூல் மையங்களில் மீண்டும் 3 ஆட்கள் மூலம் நியமித்து வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலிறயுறுத்தி மனுக்களை கொடுத்தனர். தமிழக விவசாயிகள் சங்க மாநிலசெயலாளர் ஆர்.ராஜாசிதம்பரம், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் வி.நீலகண்டன், மாவட்ட பொருளாளர் மணி, எஸ்.கே செல்லக்கருப்பு, இரா.சுந்தராசு உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!