Fasting rural postal workers strike took place in Namakkal.
நாமக்கல்லில் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு 7ஆவது ஊதியக் குழு கமலேஷ் சந்திரா குழுவின் அறிக்கையை உடனடியாக அமல்படுத்த வேண்டும். உறுப்பினர் சரிபார்ப்பு முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும் என்ற இரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், கடந்த 22 ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதனைதொடர்ந்து இன்று நாமக்கல் பார்க்ரோட்டில் உண்ணா விரத போராட்டம் நடைபெற்றது. உண்ணா விரத போராட்டத்திற்கு அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்க நாமக்கல் கோட்டச் செயலாளர் ஈஸ்வரன், தலைவர் துரைசாமி, செந்தில் ஆகியோர் தலைமை வகித்தனர்.
இதில் இந்திய கம்யூனிட்ஸ் தேசிய குழு உறுப்பினர் தம்பிராஜா உள்ளிட்ட கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.