Free Coaching Classes for Constable, Jailer and Fireman Exam : Perambalur Collector Notification!

Model
பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
தற்போது தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள இரண்டாம் நிலைக் காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை) இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணியிடத்திற்கும் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தால் காவல்துறை இரண்டாம் நிலைக் காவலர் (மாவட்ட / மாநகர ஆயுதப்படை) ஆண்கள் – 1,526 பெண்கள் – 654 இரண்டாம்நிலைக் காவலர் (தமிழ்நாடு சிறப்புக் காவல்படை) ஆண்கள் – 1,091 சிறை மற்றும் சீர்திருத்தத் துறை இரண்டாம் நிலை சிறைக் காவலர் ஆண்கள் – 153 பெண்கள் – 08 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை தீயணைப்பாளர் ஆண்கள் 120 என மொத்தம் 3,552 பணியிடங்களுக்கு பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக வருகின்ற 12.07.2022 அன்று இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளது.
இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களுடைய ஆதார் அட்டை, புகைப்படங்களுடன் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ அல்லது 90801 82131 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு பதிவு செய்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.