Free Coaching for Competitive Exams : Perambalur District Employment Officer Information!

பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பாக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள இரண்டாம் நிலைக் காவலர் / தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள தொகுதி-1 தேர்வு மற்றும் மருந்தாளுநர் போன்ற பல்வேறு தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளது என மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கு.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள இரண்டாம் நிலைக் காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை) இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணியிடத்திற்கும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள தொகுதி –1 க்கான இலவச பயிற்சி வகுப்புகள் 17.08.2022 அன்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தற்போது மருத்துவ தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள மருந்தாளுநர் (Pharmacist) மற்றும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிடப்பட்டுள்ள பீல்டு சர்வேயர் (Field Surveyor), டிராப்ட் மேன் சிவில் (Draftsman Civil), Cum-Assistant Draughtsman பணியிடத்திற்கு விரைவில் இலவச பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட உள்ளது இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களுடைய ஆதார் அட்டை, புகைப்படங்களுடன் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் தொடர்பு கொண்டு இலவச பயிற்சி வகுப்பில் பயனடையுமாறு, தெரிவித்துள்ளார்.

விளம்பரம்:

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!