Free job training for youth in Perambalur on behalf of IOB Bank!

பெரம்பலூரில் உள்ளி இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் மூலமாக வரும் செப்.21 முதல், கொரோனா காரணமாக ஏற்பட்டு இருக்கும் பொருளாதார இழப்பை ஈடுகட்டும் வகையில் அரசின் அறிவுறுத்தலின் பெயரில் “குறுகிய கால தீவிரமான பயிற்சிகள் தரப்படுக்கிறது”

அப்பளம், ஊறுகாய் மற்றும் மசாலா தயாரிப்பு, அகர்பத்தி (பினாயில், டாய்லெட் கிளீனர்) தயாரிப்பு, காஸ்ட்யூம் ஜூவல்லரி, பொம்மை தயாரித்தல், காகித பை தயாரிப்பு, சணல் பை தயாரிப்பு, மூங்கில் கைவினை பொருட்கள் தயாரிப்பு, மலர் சாகுபடி, கறவை மாடு வளர்த்தல், காய்கறி நாற்றங்கால் மேலாண்மை மற்றும் சாகுபடி, ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு ஆகிய பயிற்சிகள் ஆரம்பமாக உள்ளன.

மேற்கண்டபயிற்சிகள் 10முதல்13 நாட்கள், காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடத்தப்படும். பயிற்சி காலத்தில் காலை மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் இப்பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். இந்த சான்றிதழ் அரசால் அங்கீகரிக்கப்பட்டதாகும்.

இப்பயிற்சிகள் முடிவில் உடனடியாக தொழில் தொடங்க முறையான வழிகாட்டுதலும், வங்கியின் மூலம் கடனுதவி பெற ஆலோசனைகளும் தரப்படுகிறது, பயிற்சி பெற விருப்பம் உள்ளவர்கள் 18 லிருந்து 45 வயதிற்குள் மிகாமலும் இருத்தல் வேண்டும். கிராமப்புற இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். சுய தொழில் தொடங்க விருப்பம் உள்ளவர்கள் ஐஓபி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம், சங்கு பேருந்து நிறுத்தம் அருகில், பெரம்பலூர் என்ற முகவரியிலோ, 04328 277896 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்பபட்டுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!