Free Medical Camp under Chief Minister’s Comprehensive Insurance Scheme on behalf of Perambalur Arputhaa Hospital; Tomorrow is happening in the Kunnam.

பெரம்பலூர் அற்புத மருத்துவமனை சார்பில், தமிழக முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ், இலவச பொது மருத்துவ முகாம் குன்னம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாளை நடக்கிறது. இதில் அற்புதா மருத்துவமனை இயக்குனர் டாக்டர். சாமுவேல் தேவகுமார் மற்றும் ஸ்டெல்லா சாமுவேல் தேவகுமார் உள்பட பல மருத்துவர்கள் கலந்து கொள்கின்றனர்.

முகாமில், பொது மருத்துவம் பொது அறுவை சிகிச்சை குழந்தைகளுக்கான மருத்துவம், பெண்கள் நல மருத்துவம், சிறுநீரக கற்களுக்கான மருத்துவம், புற்றுநோய் அறுவை சிகிச்சை, உணவு குழாய், இரைப்பை, குடல் சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு அளிக்கப்படும். மேலும், முகாமில், சிறுநீரக குழாய் கற்கள் நீர் தாரை அடைப்பு பித்தப்பை கற்களுக்கான அறுவை சிகிச்சை, நீர்ப்பை கற்கள், ப்ரோஸ்டேட் சுரப்பி வீக்கம், தரை தைராய்டு மற்றும் மார்பக புற்றுநோய், கர்ப்ப வாய் புற்றுநோய், குடல் வால் வீக்கம், பித்தப்பை கற்கள், கரு முட்டையில் நீர்கட்டிகள் போன்றவற்றிற்கு லேப்ராஸ்கோபி மூலம் சிகிச்சை அளிக்கப்படும்.

தைராய்டு கட்டிகள் மார்பக கட்டிகள், வயிற்றில் கட்டிகள், குடலிறக்கம், மூலம் பவுத்திரம், விரை வீக்கம், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இருதய நோய் போன்றவற்றிற்கு முகாமில் ஆலோசனைகள் சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளது என அற்புதா மருத்துவமனை இயக்குனர் டாக்டர் சாமுவேல் தேவகுமார் தெரிவித்துள்ளார். அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!