Free Training Camp for Group Exam on behalf of Lakshmi Hospital: Perambalur MLA Prabhakaran started!
பெரம்பலூர் லட்சுமி நர்சிங் கல்லூரி மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், டார்க்கட் ஐ.ஏ.எஸ் அகாடமி இணைந்து, டி.என்.பி.எஸ்.சி., குரூப் தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு இலவசமாக பயிற்சி வகுப்பை நடத்துகிறது. பெரம்பலூர் லட்சுமி நர்சிங் கல்லூரி கூட்டரங்கில் நடந்தது.
விழாவுக்கு லட்சுமி நர்சிங் கல்லூரி தாளாளர் டாக்டர் கருணாகரன் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் தங்கராசு, லட்சுமி மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் ஜெயலட்சுமி, டார்க்கெட் அகாடமி தலைவர் விஜய்ஆனந்த், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவின் , சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பெரம்பலூர் எம்.எல்.ஏ., பிரபாகரன் டி.என்.பி.எஸ்.சி., குரூப் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பை நேற்று துவக்கி வைத்து பேசியதாவது:
தோல்வியே வெற்றிக்கு முதல்படி. அதற்கு நானே ஒரு உதாரணம். 2011 சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட நான் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியடைந்தேன். 2016ல் போட்டியிடும் வாய்ப்பு எனக்கு தரப்படவில்லை. ஆனால், 2021 தேர்தலில் போட்டியிட்ட நான் பெரம்பலூர் சட்டசபை தொகுதி தேர்தல் வரலாற்றில் அதிக ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். நான் இந்த இடத்தில் நிற்பதற்கு முன்னாள் அமைச்சர் ராசாவே காரணம். அவருக்கு என்றும் நான் நன்றி கடன்பட்டவனாக இருப்பேன். தி.மு.க., தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின், ஓட்டுப்போட்டவர்களுக்கும், ஓட்டுப்போடாதர்களுக்கும் என அனைவருக்காகவும் நாம் பணியாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார். அதன்படி நான் பணியாற்றி வருகிறேன்.
உங்களுக்கு எந்த கோரிக்கையிருந்தாலும் என்னிடம் மனுவாக தாருங்கள் தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுப்பேன். தாங்கள் அரசு பணியில் இல்லாமல் இருந்தாலும், பலரை அரசு அதிகாரிகளாக ஆக்கும் உயர்ந்த எண்ணத்தில் இந்த இலவச பயிற்சியை நடத்தும் அனைவரையும் பாராட்டுகிறேன். எனது பள்ளித் தோழன் மாதவன் கூட வி.ஆர்.எம். ஐ.ஏ.எஸ் அகாடமி நடத்தி வருகிறான், ஆனால், அரசு பள்ளியில் ஆசிரியராக இருந்து கொண்டு, அவர் நடத்தும் நோக்கம், சமூகத்தின் மீதான அக்கறை. சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னேற அவனது சமூக பங்களிப்பை பாராட்டுகிறேன். அரசு பணிக்காக நடக்கும் இந்த பயிற்சியை நன்கு பயன்படுத்தி, தேர்வில் வெற்றி பெற்று அரசு அலுவலர்களாகி தங்களது வாழ்க்கை தரத்தை உயர்த்திக்கொள்ள உங்கள் அனைவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக மக்களுக்கான மருத்துவர் கழக மாநில செயலாளர் டாக்டர் கருணாகரன் பேசியதாவது:
பாலுக்காக அழும் குழந்தை, கல்வி ஏங்கும் மாணவன், வேலையை தேடி அலையும் இளைஞன், இல்லாத நாடே சிறந்த நாடாக அமையும் என்பது பகத் சிங் கூறிய போது போல், நாட்டில் வேலையை தேடி அலையும் இளைஞர்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்ற சமூக பொறுப்புடன் இந்த பயிற்சி மையத்தை தொடங்க திட்டமிட்டோம். அப்போது, இது குறித்து டைஃபி மாவட்ட செயலாளரும் தெரிவித்தார். டார்கெட் ஐ.ஏ.எஸ். அகாடாமி விஜய்ஆனந்த் இடம் கேட்ட போது தனக்கு எந்த கட்டணமும், தரவேண்டாம், மாணவர்களையும், இடத்தையும் கொடுங்கள், எங்கள் பயிற்சியாளர்களை வைத்து, சிறப்பு வகுப்புகளை நடத்தி தெரிவித்தார். எனவே, இந்த பயிற்சியை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என பேசினார்.
டார்கெட் ஐ.ஏ.எஸ் அகாடமி தலைவர் விஜய்ஆனந்த் பேசியதாவது:
மக்கள் தொகையில் கடைசி இடத்தில் உள்ள பெரம்பலூர் மாவட்டத்தில், அரசு வேலை குறித்த போதுமான வழிப்புணர்வு இல்லை. மற்ற மாவட்டங்களை ஒப்பிடும் போது மிகவும் குறைவு என தெரிவித்தார். எனவே அரசு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்ம் என கேட்டுக் கொண்டார். முன்னதாக, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் அறிவழகன் வரவேற்றார். விரிவுரையாளர் எசனை குமணன், ஸ்டிக்கர் சத்யா, மற்றும் பயிற்சி பெறும் மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் ராமு நன்றி கூறினார்.