Perambalur: Amicable settlement for cases throughout September; District Mediation Centre announces.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட சமரச தீர்வு மையத்திலும், தாலுகா அளவில் உள்ள துணை சமரச தீர்வு மையங்களிலும் ஆகஸ்ட் முதல் செப்டம்பர் 2026 வரை 60 நாட்கள் நீதிமன்றங்களில் உள்ள சமரசத்திற்கு உகந்த வழக்குகளை சமரச தீர்வு மையத்திற்கு அனுப்பி வைக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சிறப்பு முகாம்களில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில் குடும்ப நல வழக்குகள், பண மோசடி வழக்குகள், பெண்களுக்கு எதிராக வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்குகள், வணிகம் சம்பந்தப்பட்ட வழக்குகள் மற்றும் பாகப்பிரிவினை உள்பட சிவில் வழக்குகள் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தங்களின் வழக்குகளை நேரடியாகவோ அல்லது இணையம் வழியாகவோ பேசி சமரச முறையில் தீர்வு காண தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே வழக்காடிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு பெரம்பலூர் மாவட்ட சமரச தீர்வு மைய ஒருங்கிணைப்பாளரும், சார்பு நீதிபதியுமான ஏ. சரண்யா தெரிவித்துள்ளார்.










kaalaimalar2@gmail.com |
9003770497