Free training classes for the choice of bank
மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் தெரிவித்துள்ளதாவது:
IBPS வங்கித் தேர்வு ஆண்டுத் திட்ட அறிக்கை 2016 -2017-இன் படி தற்போது அறிவிக்கப்பட்டுள்ள IBPS – PO/MT (OFFICER) வங்கித் தேர்வுக்கான முதல் நிலைத் தேர்வு 2016 அக்டோபர் 16, 22 & 23 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. எனவே மேற்படி தேர்வில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மாணவ மாணவியர்கள் பங்கு கொண்டு வெற்றி பெறும் நோக்கில் முதனிலைத் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு 01.09.2016 முதல் (மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை) மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பயிற்சி அரங்கில் நடத்தப்பட உள்ளது.
இத்தேர்வுக்கு ஏற்கனவே விண்ணப்பத்துள்ள விண்ணப்பதாரர்கள் இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறலாம். மேலும் இப்பயிற்சி வகுப்பில் புதியதாக சேர விரும்புவோர் வங்கித் தேர்விற்கு இணையதளத்தில் விண்ணப்பித்த விண்ணப்ப நகலுடன் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு பயன்பெறலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.