Full curfew for corona prevention operation in Perambalur district today!
பெரம்பலூர் மாவட்டம் முழுவதும், இன்று கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கு அரசு உத்திரவின் பேரில் கடைபிடிக்கப்பட்டு, கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் அடைக்கப்பட்டது. மேலும், விதிவிலக்காக மருந்து கடைகள், மருத்துவமனைகள் இயங்கின. பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டிருந்தன. விவசாயப் பணிகள் தொய்வில்லாமல் நடந்து வருகிறது.