Girl 6 months pregnant: Pokcho law passed on 2 persons including boyfriend: Perambalur All Woman Police action!


பெரம்பலூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 15 வயது மாணவி. 10 வகுப்பு படித்துள்ளார். வீட்டிற்கு தூரம் ஆகாமல் இருந்ததால், சந்தேகமடைந்த அச்சிறுமியின் தாய் மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவரிடம் பரிசோதித்துள்ளார். பரிசோதித்த மருத்துவர் சிறுமி 6 மாதம் கர்ப்பமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த அந்த தாய் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுமியிடம் நடத்திய விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த தன்னுடன் படித்த 16 வயது சிறுவனும் சேர்ந்து இருவரும் காதலித்து வந்துள்ளதும், அதே பகுதியை சேர்ந்த மற்றொரு 25 வயது கொண்ட வாலிபரும், உடலுறவு கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்த பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர், சிறுமியின் காதலன், மற்றும் உல்லாசம் அனுபவித்த வாலிபர் இருவருரையும் கைது செய்து நீதிமன்றத்தில் நேர் நிறுத்தி சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்த சம்பவம் கிராமத்தில் சிறுமி ஒருவரை காதலித்தும், மற்றொருவருடன் தொடர்பில் இருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதோடு, இளைய சமுதாயத்தினர் சீரழிந்து வரும் சம்பவங்கள் சமூக மாற்றத்தை அறிவிக்கின்றன.

சிறுமிக்கு பாதுகாப்பான ஆலோசனை மற்றும் வாழ்ககை வழிகாட்டலை எடுத்து உரைத்து வருகின்றனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!