Government College Honorary Lecturers sit-in near Perambalur against non-payment of salary, arrears supported by Marxist Party
பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூர் மற்றும் வேப்பூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இக் கல்லூரியில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு கடந்த 3 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள ஊதியத்தை வழங்கக் கோரியும், 25 மாத கால நிலுவைத் தொகையினை வழங்க கோரியும் கடந்த 25ஆம் தேதி முதல் வகுப்புகளை புறக்கணித்து, இருபாலர் பேராசிரியர்களும் இரவு பகலாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்களுக்கு வழங்க வேண்டிய ஊதியம் மற்றும் நிலுவைத் தொகையை வழங்காதவரை உள்ளிருப்பு போராட்டம் தொடரும் என்று தெரிவித்தனர்.
இந்நிலையில் மூன்றாம் நாள் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் விரிவுரையாளர்கள் போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பி.ரமேஷ் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.செல்லதுரை, மக்களுக்கான மருத்துவர் கழக மாநில செயலாளர் சி.கருணாகரன் ஆகியோர் நேரில் சென்று கோரிக்கைகளை கேட்டறிந்து ஆதரவு தொpவித்தனர். விரிவுரையாளர்கள் கோரிக்கைகளை உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர். மேலும் ஊதியம் வழங்காத பட்சத்தில் இன்னும் ஓரிரு நாட்களில் சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த இருப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விரிவுரையாளர்கள் தெரிவித்தனர்