Government of Tamil Nadu 7.5 per cent reservation for government school students to study medicine; 7 selected for Perambalur district students; Collector Info!

பெரம்பலூர் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தமிழக அரசு 12ஆம் வகுப்பு முடித்த மாணாக்கர்கள் மருத்துவ கல்வியில் சேர்வதற்கு தேசிய அளவிலான நீட் கட்டாயமாக்கப்பட்ட சூழ்நிலையில் தமிழக மாணவர்கள் மருத்துவ கல்லூரியில் சேர்வதில் ஏற்பட்ட இடர்பாடுகளை கருத்தில் கொண்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசு மருத்துவ கல்லூரியில் தேவையான இடங்களை உறுதி செய்திடும் பொருட்டும் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணையினை கடந்த அக். 29 அன்று வெளியிட்டது.

அதனைத் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்தில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த 7 மாணவ, மாணவிகளுக்கு மருத்துவ கல்வி பயில்வதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்ற வே.ஜெயசூர்யா என்ற மாணவருக்கு மதுரை அரசு மருத்துவ கல்லூரியிலும், அ.அபிதா என்ற மாணவிக்கு திருச்சி அரசு கே.ஏ.பி.வி மருத்துவ கல்லூரியிலும், க.கார்த்திக்கேயன் என்ற மாணவனுக்கு தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும், பேரளி அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்ற டி.மணிகன்டன் மற்றும் டி.ராதா ஆகிய 2 மாணவ, மாணவிகளுக்கு திருச்சி அரசு கே.ஏ.பி.வி மருத்துவ கல்லூரியிலும், செட்டிக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்ற ஆர்.சத்தியமூர்த்தி என்ற மாணவருக்கு பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும், வசிஷ்டபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்ற ஆர்.அகல்யா என்ற மாணவிக்கு கோயம்புத்தூர் ஆர்.வி.எஸ் பல் மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும் மருத்துவம் பயில்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அரசுப்பள்ளிகளில் பயில்வதால் நீட் போன்ற உயர் படிப்புகளில் சேர்வது கடினம் என்ற சூழ்நிலையில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதை தொடர்ந்து பொருளாதார ஏற்றத்தாழ்வின்றி அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களின் இலட்சியம், கனவு நிறைவேற தமிழக அரசு வழிவகை செய்துள்ளது. அரசு பள்ளிகளில் பயின்று மருத்துவ துறையில் சேர்வதன் மூலம் எதிர்கால இளைய மாணவ சமுதாயத்தினருக்கு தன்னம்பிக்கையும் புத்துணர்வையும் உருவாக்க வழிவகை செய்துள்ளது என அதில் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!