Govt college students protest near Perambalur!

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் இன்று காலை திடீரென 2 ம் ஆண்டு மாணவர் முகமது ஜமால் தலைமையில் மாணவ-மாணவியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தில் கல்லூரி முன்பு, பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் செல்லும் அனைத்து பேருந்துகளும், நின்று செல்ல வேண்டும், கல்லூரி தொடங்கும் நேரத்திலும் கலைந்து செல்லும் நேரத்திலும் அதாவது காலை மற்றும் மாலை வேலைகளில் கூடுதலாக பஸ் இயக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

தகவல் அறிந்து அரும்பாவூர் போலீசார் மற்றும் அரசு போக்குவரத்து பணியாளர்கள் நேரில் வந்து மாணவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு விலகி சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

விளம்பரம்:


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!