Grant for those interested in poultry farming: Perambalur Animal Husbandry Department

Model
தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 2020 -21 கீழ், 1000 கோழி பராமரிப்புக்கு சொந்தமாக குறைந்தபட்சம் 2500 சதுர அடி இடம் பராமரிப்பு கொட்டில், தீவனம் மற்றும் தண்ணீர் குவளைகள் வைத்திருக்கும் கோழி வளர்ப்பில் அனுபவம் அல்லது ஆர்வம் கொண்ட விவசாயிகளாக இருக்கவேண்டும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளில் 30 சதவீதம் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினரைச் சேர்ந்தவர்களாக இருக்கவேண்டும். 2012 முதல் 2017 வரையிலான கோழி அபிவிருத்தி திட்டத்தின் பயனாளிகளாக இருக்கக்கூடாது. 3 வருடங்களுக்கு குறையாமல் பண்ணையை பராமரிக்கவேண்டும்.
ஒவ்வொரு பயனாளியும் 1000 எண்ணிக்கை பாலினம் பிரிக்கப்படாத இரட்டைப் பயன் (இறைச்சி, முட்டை) நாட்டுக் கோழிக் குஞ்சுகளை, ரூ.30 ஆயிரத்திற்கு கொள்முதல் செய்த பின்னர், பின்னேற்பு மானியமாக ரூ.15 ஆயிரம்- நேரடி மானிய மாற்றல் முறையில் பயனாளியின் வங்கி கணக்கில் வழங்கப்படும். ஒவ்வொரு பயனாளியும் 1500 கிலோ கோழித் தீவனத்தினை ரூ.45,000-க்கு கொள்முதல் செய்த பின்னர் பின்னேற்பு மானியமாக ரூ.22,500- நேரடி மானிய மாற்றல் முறையில் பயனாளியின் வங்கி கணக்கில் வழங்கப்படும்.
ஒவ்வொரு பயனாளியும் ரூ.75,000- மதிப்புள்ள குஞ்சு பொரிப்பான் கொள்முதல் செய்த பின்னர், பின்னேற்பு மானியமாக ரூ.37,500- நேரடி மானிய மாற்றல் முறையில் பயனாளியின் வங்கி கணக்கில் வழங்கப்படும். திட்டத்தில் பயனடைய விரும்புவோர் நவ 23-க்குள் அருகில் உள்ள கால்நடை மருந்தகத்தை அணுகி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.