Group 1, Exam : 2228 wrote in Perambalur!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்தால் நடத்தப்படும் தொகுதி-I ற்கான தேர்வு தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி தேர்வு மையத்தினை தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணய தலைவர் சி.முனியநாதன் நேரில் பார்வையிட்டார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் குரூப் 1 தேர்வை, 3,406 நபர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்தனர். இதில் 1,178 நபர்கள் தேர்வு எழுத வரவில்லை. மீதமுள்ள 2,228 நபர்கள் தேர்வு எழுதினர்.
தேர்வினை கண்காணிப்பதற்காக 2 துணை ஆட்சியர் நிலையிலான பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தேர்வு நடவடிக்கைகள் முழுவதும் 12 வீடியோ கிராபர்கள் மூலமாக வீடியோபதிவு செய்யப்பட்டது.
தேர்வு மையத்தில் குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும், காவல் துறையின் சார்பில் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் உடனடி சிகிச்சை அளிக்க மருத்துவர்கள், செவிலியர் கொண்ட மருத்துவ குழு, தீயணைப்பு, மீட்பு பணிகள் துறை சார்ந்த அலுவலர்கள் என அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை மேற்கொண்டனர்.