Historic achievement: New city buses to reach 100 percent coverage in Perambalur district; a new bus experience for ordinary citizens; public praises Minister Sivasankar!

தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பெரம்பலூர்புதிய பேருந்து நிலையத்தில் கலெக்டர் ந.மிருணாளினி தலைமையில் பி.எஸ்.6 ரக 4 புதிய பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் முன்னிலை வகித்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து தரப்பு மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்குமான பேருந்து சேவையினை உறுதிப்படுத்திடும் வகையில் புதிய வழித்தடங்களையும், புதிய பேருந்துகளையும் தொடர்ந்து வழங்கி வருகின்றார்.

போக்குவரத்துத்துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்திடும் வகையில் மின்சார பேருந்துகள், சி.என்.ஜி பேருந்துகள், தாழ்தள பேருந்துகள், மாற்றுத்திறனாளிகள் எளிதில் பேருந்தில் ஏறி இறங்க சாய்தள வசதிகளுடன் கூடிய பேருந்துகள், BS6 ரக பேருந்துகள் என பல்வேறு வகையான பேருந்துகள் தமிழ்நாட்டில் மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது,

பெரம்பலூரில் இருந்து ஆலத்தூர் கேட், பாடாலூர் வழியாக திருப்பட்டூருக்கும், வேலூர் – செட்டிகுளம் வழியாக நக்கசேலத்திற்கும், அம்மாபாளையம், லாடபுரம் வழியாக மேலப்புலியூருக்கும், அரசலூர் வழியாக பிள்ளையார்பாளையத்திற்கும் என 4 புதிய பேருந்துகளை போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கடந்த ஒவ்வொரு ஆட்சியிலும், ஓடி களைத்த, ஓய்ந்த இத்து போகும் நிலையில் இருக்கும் பேருந்துகளே நகரப் பேருந்துகளாக மாற்றம் செய்யப்பட்டும், பட்டி, டிங்கரிங் பார்த்து விடப்படும். அது கிராம மக்களுக்கு பெரும் அசவுகர்யமாக இருக்கும். மேலும், தகரம், கம்பி போன்றவைகள் ஆடிக் கொண்டே டி.டி.எஸ் சத்தம் எழுப்பும். மேலும், எப்போது எங்கும் நிற்காது என தெரியாது, நிற்க கூடாத முக்கியமான நேரத்தில் நின்றுவிடும். உரிய மாற்று டயர்களோ, டூல்ஸ் கிட்டுகளோ இல்லாமல் தள்ளுமாடல் பேருந்துகளாக காட்சி அளிக்கும். ஆனால், தற்போது திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தற்போது தமிழ்நாடு முழுவதும் நகர பேருந்துகளை மாற்றி புதிய விடியல் பயண பேருந்துகளாக வாக்களித்த மகளிருக்கு இலவச பயணம் செய்ய அளித்துள்ளது. இதனால். தற்போது, பயணிக்கும் அச்சமில்லாமல் பயணிக்கின்றனர்.

காந்தி சொன்னதை போல கிராமங்களில் தான் இந்நாட்டின் முன்னேற்றம் உள்ளது வகையில் கிராம மக்கள் நகரத்திற்கு வந்து செல்லும் பேருந்துகள் புதிதாக மாற்றம் செய்துள்ளது தமிழ்மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதோடு, போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கரை பொதுமக்கள் பாராட்ட செய்கின்றனர். முன்பெல்லாம் நகர பேருந்தை ஓட்ட அரசு பேருந்துகள் ஓட்ட அவ்வளவு ஆர்வம் காட்டமாட்டார்கள், ஆனால், புதிய ரக பேருந்துகள் விளக்குகள் வெளிச்சதில் ஜொலிப்பதால் டியூட்டி பார்க்க பெரும் ஆர்வமாக உள்ளனர்.

போக்குவரத்துக்கழக திருச்சி மண்டல பொது மேலாளர் டி.சதீஸ்குமார், நகராட்சித் தலைவர் அம்பிகா ராஜேந்திரன், துணைத் தலைவர் ஆதவன், பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், கோட்ட மேலாளர் ராம்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜ்குமார், துரைசாமி, பெரம்பலூர் கோட்ட துணை மேலாளர் (தொழில்நுட்பம்) எம்.எஸ்.ஜி.புகழேந்தி ராஜ், பெரம்பலூர் கிளை மேலாளர் தண்டாயுதபாணி, மாவட்ட துணைச் செயலாளர் தழுதாழை பாஸ்கர், ஒன்றிய செயலாளர்கள் மதியழகன், அழகு.நீலமேகம், ராஜேந்திரன், நல்லத்தம்பி, முன்னாள் ஒன்றிய சேர்மன் பிரபா செல்லப்பிள்ளை, முன்னாள் வேப்பந்தட்டை யூனியன் துணை சேர்மன் ரெங்கராஜ், திமுக பொதுக்குழு உறுப்பபினர் பட்டுச்செல்வி ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!