Hundreds of tonnes of Bellary onion hoarded in Perambalur district: BJP chief linked?
பெரம்பலூர் மாவட்டத்தில் அதிகளவில் கோழிப் பண்ணைகளிலும், வெங்காய கொட்டகைகளிலும் பல நூறு டன் மதிப்புள்ள பெல்லாரி வெங்காயம் பதுக்கப்பட்டுள்ளதாக வேளாண் மற்றும் தோட்டகலைத் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்து, பறிமுதல் செய்யாமல் விட்டு வந்தனர்.
விண்ணை முட்டும் வெங்காய விலை ஏற்றத்தால் மக்கள் பரிதவித்து வரும் வேளையில், பெரம்பலூர் மாவட்டத்தில் பெல்லாரி வெங்காயம் பெருமளவில் பதுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. பெல்லாரி வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் ஏழை மற்றும் நடுத்தட்டு மக்கள் வெங்காயத்தை பயன்படுத்த முடியாத அவலம் நீடித்து வருகிறது. வட மாநிலத்தில் பெய்யும் கன மழை காரணமாக விளைச்சல் குறைவு என பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வந்த நிலையில் பெரிய வியாபாரிகள் வெங்காயத்தை பதுக்கி செயற்கை தட்டு பாட்டை ஏற்படுத்துவதே இந்த விலை ஏற்றத்திற்கு முக்கிய காரணம் என்று பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், ஆலத்தூர் பகுதியில் உள்ள இருர் கிராமத்தில் வருவாய் இன்றி மூடப்பட்ட கறிக்கோழி பண்ணைகளை ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு எடுத்த பெரிய வெங்காய வியாபாரிகள் அந்த பண்ணைகளில் பெல்லாரி வெங்காயத்தை பதுக்கி வைத்துள்ளதாக வந்த தகவலின் பேரில், மாவட்ட தோட்டகலைத் துறை மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் அங்கு நேரில் சென்று விசாரணை நடத்தியதில் அங்கு பல்வேறு இடங்களில் பெல்லாரி வெங்காய மூட்டைகள் டன் கணக்கில் பதுக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், இது குறித்து சம்மந்தபட்ட கொட்டகைதாரர்கள் இந்த பெல்லாரி வெங்காயத்தை விதைக்காக வைத்திருப்பதாக தெரிவித்தனர். இந்த சிரிப்புள்ளாக்கியது. மேலும், இந்த பதுக்கலுக்கு பின்னால் திருச்சியில் வெங்காயமண்டி நடத்தும் பா.ஜ க முக்கிய பிரமுகர் ஒருவருக்கு உள்ளதும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்ததால், அதிகாரிகள் பின்வாங்கினர்.