I will bring the dormant medical college: Kunnam DMK candidate promises in the election campaign!

பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட குன்னம் தொகுதிக்கு திமுக சார்பில் 2 வது முறையாக அரியலூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான சிவசங்கர் போட்டியிடுகிறார். இன்று காலை அவர், வேப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வீரமநல்லூர், வ.கீரனூர், வயலப்பாடி, வேள்விமங்கலம், கைப்பெரம்பலூர் உள்ளிட்ட ஊர்களில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். சென்ற இடங்களில் பெண்கள் ஆரத்தி எடுத்து வெற்றி திலமிட்டு வாழ்த்தி அனுப்பினர். முன்னதாக ஆங்காங்கே கட்சியினர் மலர்மாலை அணிவித்தும், பட்டாசுகள் வெடித்தும் வரவேற்றனர். பிரச்சாரத்தில் பேசிய வேட்பாளர் சிவசங்கர், திமுக ஆட்சியில் கொண்டு குன்னம் மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட பல வரப்பட்ட திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அவைகள் அனைத்தும் திமுக ஆட்சிக்கு வந்ததும், செயலுக்கு கொண்டு வரப்படும் என்றும், தேர்தல் அறிக்கைகளை எடுத்துரைத்தும், திமுகவின் முந்தைய ஆட்சியின் சாதனைகளையும் எடுத்துரைத்து வாக்குகளை சேகரித்தார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!